Home /pudukkottai /

சுந்தர பாண்டியன் கட்டிய 700 ஆண்டுகள் பழமையான ஆலங்குடி நாமபுரீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்..

சுந்தர பாண்டியன் கட்டிய 700 ஆண்டுகள் பழமையான ஆலங்குடி நாமபுரீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்..

ஆலங்குடி

ஆலங்குடி நாமபுரீஸ்வரர் ஆலயம், புதுக்கோட்டை மாவட்டம்

Pudukkottai Alangudi Namapureeswarar Temple | புதுக்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆலங்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது நாமபுரீஸ்வரர் என வழங்கப்படும் பேரூராண்டார் திருக்கோவில்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் ஆலயம் குறித்த சிறப்புகளை தற்போது அறிந்துகொள்வோம்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ளது இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் அருள்மிகு நாமபுரீஸ்வரர் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில். 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிவில் என  கூறப்படும் இந்த ஆலயத்தை சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னர் கட்டியதாக வரலாறு.

பேரூராண்டார் - அறம்வளர்த்த நாயகி அம்பிகை

கோவிலின் ராஜகோபுரத்தில் இருந்து பார்த்தால் நேரடியாக நாமபுரீஸ்வரர் என வழங்கப்படும் பேரூராண்டார் என்ற நாமத்தோடு சிவபெருமானின் ஆலயம் காணக்கிடைக்கிறது.
கொடிமரம், நந்தி ஆகியோரைத் தாண்டி உள்ளே சென்றால் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
கொடிமரத்தின் அருகிலேயே தென்புறம் பார்த்தவாரு அருள்பாளிக்கிறார் அறம்வளர்த்த நாயகி அம்பிகை.

இதையும் படிங்க:  திங்கள்தோறும் களைகட்டும் ஆலங்குடி, அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களின் ஏலக்கடைகள்..

தெற்கு  பார்த்த குரு பகவான்

மற்ற சிவ ஆலயங்களில் இருந்து மாறுபாடாக இரண்டாவது குருஸ்தலம் என்பதால், ஈசனின் ஆலயத்தின் வலப்புறத்தில் தெற்குப் பார்த்தவாறு தனி ஆலயத்தில் இருந்து காட்சி தந்து அருள்பாளிக்கிறார் குரு பகவான் என அழைக்கப்படும் தெட்சிணாமூர்த்தி. வியாழன் தோறும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிகின்றனர்.

இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதாக கூறுகின்றனர் கோவில் நிர்வாகிகள். எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக இக்கோவிலின் பிரதோஷ நந்திக்கு நெற்றியில் வைணவ அடையாளமான நாமம் காணப்படுகிறது.

இதையும் படிங்க:  பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் புதுக்கோட்டை அறம்வளர்த்த நாயகி திருக்கோவில்- சிறப்புகள் தெரியுமா?

பாலகனாக சனிபகவான்

கோவிலில் அருள் பாளிக்கும் சனிபகவான் பாலகனாக காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும். அத்தோடு சனிபகவான் இவ்வாலயத்தில் பாலசனிபகவான் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறார்.

அஷ்டமி - சிறப்பு வழிபாடு

கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் வினாயகப் பெருமான், முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கையம்மன் என பிராகாரங்களில் காட்சி தருகின்றனர். கோவிலில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் பைரவப் பெருமானுக்கு ஒவ்வொரு அஷ்டமியும் சிறப்பு வழிபாடுகளோடு அபிஷேகங்கள் நடைபெற்று வருவதாகவும் தேய்பிறை அஷ்டமியில் இங்கு வழிபாடு செய்யும் பக்தர்கள் அனைவரும் வேண்டுதல்களும் உடனடியாக நிறைவேறுவதாகவும் கூறுகிறார் கோவிலின் குருக்கள் ஸ்ரீத சொர்ணபைரவ சிவாச்சாரியார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கோவிலில் வைத்து திருமணம் செய்தால் உடனடிநாக குழந்தை வரம் கிடைக்கும் என்ற ஐதீகத்தால் முகூர்த்த நாட்களில் கோவில் வளாகத்தில் பல திருமணங்கள் நடைபெறுகின்றன.
புகழ்பெற்ற இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி