முகப்பு /புதுக்கோட்டை /

“கம்பியில்லா கைப்பேசி பேட்டரி சார்ஜர்... தானியங்கி தெருவிளக்கு” அறிவியல் கண்காட்சியில் அசத்திய புதுக்கோட்டை மாணவர்கள் 

“கம்பியில்லா கைப்பேசி பேட்டரி சார்ஜர்... தானியங்கி தெருவிளக்கு” அறிவியல் கண்காட்சியில் அசத்திய புதுக்கோட்டை மாணவர்கள் 

X
நீர்பழனி

நீர்பழனி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி

Pudukkottai | கம்பியில்லா கைப்பேசி சார்ஜர், தானியங்கி தெருவிளக்கு என பல்வேறு படைப்புகளை அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தி அசத்திய அரசு பள்ளி மாணவ மாணவிகள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நீர்பழனி அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் மன்றம் சார்பில் அறிவியல் கண்காட்சி 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் பள்ளியில் படிக்கும் 40 மாணவர்கள் கலந்துகொண்டு, தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி செய்முறை விளக்கம் அளித்தனர்.

இதில் தானியங்கி தெருவிளக்கு, தானியங்கி நெடுஞ்சாலை உணர்வி, அறிவியல் மாதிரிகள், மூலிகைகள் பயன்பாடு, பாரம்பரிய உணவு வகைகள், நீர் மின்சாரம், காற்று மின்சாரம், சூரிய மின்சாரம், இயற்கை வேளாண்மை, சாலை பாதுகாப்பு விதிகள், வேதியியல் சார்ந்த எளிய பரிசோதனை,கம்பியில்லா மின்சாரம் போன்றவை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு விருந்தினர்களுக்கு மாணவர்கள் விளக்கி கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவிகள் தாங்கள் கண்டுபிடித்த ஏராளமான படைப்புகளை காட்சிகளாக வைத்து அதற்கு செயல்முறை விளக்கம் தந்தனர். தற்போதைய விஞ்ஞான உலகத்தில் அறிவியலின் முக்கியத்துவம் எவ்வாறு உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இந்த கண்காட்சி இருந்தது.

இதில் தானியங்கி நெடுஞ்சாலை உணர்வி, கம்பியில்லா கைப்பேசி பேட்டரி சார்ஜர், தானியங்கி தெருவிளக்கு சாதனங்கள் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது.

First published:

Tags: Local News, Pudukkottai