புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பொதியகோன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களான கோவிந்தராஜ், சதிஷ், ராம்குமார் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இவர்கள் 4 பேரும் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
இவர்கள் கல்வி பயின்று கொண்டே கிடைக்கும் சொற்ப நேரத்தை பொழுதுபோக்குக்காக செலவழிக்காமல், ஒரளவு வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
இதற்கு முதலீடு இல்லாமல் என்ன தொழில் செய்வது என்று 4 பேரும் ஒன்று கூடி பேசியபோது கிடைத்த யோசனை தான் நுங்கு விற்பது என்பது. தற்போது கோடை காலம் என்பதால் நுங்கு விற்பனையில் இறங்கினால், தாங்கள் உடல் உழைப்பு வீணாகாது அதற்கு தகுந்த லாபம் கிடைக்கும் என்று முடிவு செய்த 4 பேரும் காட்டுப்பகுதிகளில் வளர்ந்து நிற்கும் பனை மரத்தில் ஏறி நுங்குகளை பறித்து, அதை சைக்கிளிள் கட்டிக் கொண்டு வந்து விராலிமலை-கீரனூர் சாலையோரம் தங்கள் ஊருக்கு அருகே வைத்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
வெயில் காலம் என்பதால் பலர் உடல் சூட்டை தணிக்க இயற்கை பானமான நுங்கை விரும்பி வாங்கி செல்வதால் வெயில் சூட்டுடன் சேர்ந்து வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதில் கிடைக்கும் வருமானத்தை 4 பேரும் அன்றாடம் பிரித்து கொள்கின்றனர். இதனைத்தொடர்ந்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் தங்களுக்காக எதுவும் செலவு செய்து கொள்ளாமல், தங்களை ஆளாக்கி வளர்த்து படிக்க வைத்து வரும் தாங்கள் தாய், தந்தையை நினைத்து குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோரிடமே கொடுத்து விடுகின்றனர்.
இந்த மாணவர்களின் செயலை அவ்வழியே செல்வோர் வியப்புடன் பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களுள் சிலர், பேரம் பேசி நுங்கு வாங்கினாலும், பலர் விலை பேரம் பேசுவதில்லையாம். இந்த மாணவர்கள் நுங்கை அதிக விலைக்கு விற்காமல் நியாயமான விலைக்கு விற்று வருவதாக சொல்கின்றனர்.
இதுகுறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், “கிடைக்கும் விடுமுறை நாட்களை இந்த தொழிலுக்கு நாங்கள் பயன்படுத்திக் கொண்டபோதும், படிப்பிலேயே தங்கள் முழு கவனமும் செலுத்துகிறோம். விடுமுறை நாட்களில் மட்டுமே நுங்கு விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வளர்ந்து வரும் அறிவியல் நாகரீக வளர்ச்சியில் கைபேசியை பயன்படுத்தி ஒரு சில மாணவர்களைப் போல் இணையதள விளையாட்டுகளில் மூழ்கி போய் வீட்டினுள் முடங்கி கிடக்காமல் இந்த இளம் உழைப்பாளர்கள் உழைக்கின்றனர். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்கள் மூலம் குடும்பம் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை தாங்கள் உடலில் தாங்கிக் கொண்டு சாலையோரம் கடை அமைத்து நுங்கு விற்பனையில் ஈடுபடும் இந்த மாணவர்களின் செயல் மிகவும் பாராட்டுக்குரியதாக திகழ்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai