Home /pudukkottai /

Pudukkottai | 101 குட்டீஸ்கள் பாரதியார் வேடமணிந்து சென்று ஆட்சியருடன் சந்திப்பு

Pudukkottai | 101 குட்டீஸ்கள் பாரதியார் வேடமணிந்து சென்று ஆட்சியருடன் சந்திப்பு

குழந்தைகளுடன் ஆட்சியர்

குழந்தைகளுடன் ஆட்சியர்

மகாகவி பாரதியாரின் வேடமணிந்து சென்று 101 பள்ளிக் குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பாரதி கண்ட புதுமை பெண்ணாக விளங்குவதாக கூறி பாரதியார் வேடமடைந்த 101 குட்டீஸ்கள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆட்சியர் பணி, கலைப்பணி உள்ளிட்ட பல்வகை பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார். மேலும் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இவர் உருவாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழக முதல்வர் பாராட்டையும் பெற்றது.

இதனால் மாவட்ட ஆட்சியர் பாரதி கண்ட புதுமை பெண்ணாக விளங்குவதாக சமூக வலைதளங்களில் இவர் குறித்த பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பாரதியார் வேடத்தில் குழந்தைகள்


இந்த நிலையில் பாரதியாரின் 101-வது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை தனியார் பள்ளியைச் சேர்ந்த 101 பள்ளி சிறுவர்கள் பாரதியார் வேடம் அணிந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

குழந்தைகளுடன் ஆட்சியர்


மேலும் பாரதியார் கவிதைகளை பதாகைளை ஏந்தி குட்டீஸ்கள் ஊர்வலமாக வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

குழந்தைக்கு பரிசளிக்கும் ஆட்சியர்


தனக்கு வாழ்த்து தெரிவித்த குட்டீஸ்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றிகளை தெரிவித்து அவர்களோடு செல்பியும், குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி