முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை வயலோகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சந்தன கூடு விழா..

புதுக்கோட்டை வயலோகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சந்தன கூடு விழா..

X
12

12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற சந்தன கூடு விழா

Pudukkottai News : புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் மஹான் ஹஜரத் சையது முகமது அவுலியா,மஹான் ஹஜரத் முகமதுகனி அவுலியா தர்காவில் சந்தன உரூஸ் விழா கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் மஹான் ஹஜரத் சையது முகமது அவுலியா, மஹான் ஹஜரத் முகமதுகனி அவுலியா தர்காவில் சந்தன உரூஸ் விழா கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் தர்காவில் சந்தன உரூஸ் விழா நடத்துவதில் ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக விழா நடைபெறாமல் தடைப்பட்டிருந்தது. இதுதொடர்பாக விழாவை யார் நடத்துவது? என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. இதில் வயலோகத்தை சேர்ந்த ஒரு தரப்பு நடத்தி கொள்ள அனுமதி அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து சந்தன உரூஸ் விழா நடைபெற்றது.

முன்னதாக கடந்த ஜனவரி 23ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக விழா தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன உரூஸ் வண்ணமயமான விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கந்தூரி விழா 2 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு மதம் கடந்து மனிதம் காக்கும் நண்பர்கள் சார்பாக மாபெரும் அன்னதான நிகழ்ச்சி, கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

First published:

Tags: Local News, Pudukkottai