ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா... 

புதுக்கோட்டை கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா... 

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai Pongal Celebration : புதுக்கோட்டை கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பனை ஓலையில் குடில் அமைத்து, விறகு அடுப்பில் பொங்கல் வைத்து, முளைப்பாரி சுமந்து கும்மியடித்து குலவையிட்டு சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய பள்ளி மாணவ, மாணவிகள். பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டதால் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி வளாகத்தில் பனை ஓலையில் குடில் அமைத்து 9 அடுப்புகளில் பொங்கல் பானை வைக்கப்பட்டு சமத்துவ பொங்கல் விழா பள்ளி நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது.

இதில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாகமாய் பங்கேற்று ஆடல், பாடல், கோலாட்டம், கம்பு சுற்றுதல், ட்ரம் செட் வாசித்தல் என பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகமாய் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Pudukkottai