முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துகள்... விஜயபாஸ்கருக்கு எதிராக குற்றப்பத்திரிகை..!

வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துகள்... விஜயபாஸ்கருக்கு எதிராக குற்றப்பத்திரிகை..!

சி.விஜயபாஸ்கர்

சி.விஜயபாஸ்கர்

சி.விஜயாபஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது 216 பக்க குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கிலும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் 27 கோடியே 22 லட்சம் ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.விசாரணையில் 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர் விசாரணையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி பெயரிலும், ராசி புளூ மெட்டல்ஸ், ராசி என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெயரிலும் நிலங்கள், தொழில் முதலீடு என மொத்தம் 35 கோடியே 79 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. 

இதையடுத்து புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.விஜயாபஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது 216 பக்க குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

First published:

Tags: AIADMK, Vijayabaskar