முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழா விழிப்புணர்வு பேரணி..

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழா விழிப்புணர்வு பேரணி..

X
புதுக்கோட்டையில்

புதுக்கோட்டையில் நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழா விழிப்புணர்வு பேரணி ..

Reconciliation Day Awareness Rally Pudukkottai : புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சமரச தீர்வு மைய விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார்.

இதனைத்தொடர்ந்து, இந்த விழாவில் சமரச தீர்வு மையம் பற்றிய விழிப்புணர்வு பலகையை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் திறந்து வைத்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு சமரச விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்த விழாவில் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராஜா, முதன்மை சார்பு நீதிபதி குற்றவியல் நீதித்துறை நடுவர் அறிவு, சமரச தீர்வு மைய வழக்கறிஞர்கள், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : வௌவால்கள் இருந்தால் இவ்வளவு நன்மைகளா? நெல்லை இயற்கை ஆர்வலர் சொன்ன சுவாரஸ்ய தகவல்..

வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரும், சமரசமாக தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு சமரச தீர்வுமையம் ஆகும்.

வழக்குகளில், நேரடியாகவோ அல்லது வக்கீல் மூலமோ ஆஜராகும்போது உங்கள் வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். மேலும் சமரச மையத்தில் எதிர்த்தரப்புடன் நேரடியாக நீங்களே பேச்சுவார்த்தை நடத்தலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சமரச மையத்தில் நடைபெறும் வழக்குகளில் சமரச முடிவு ஏற்படும்போது எந்தவித மேல்முறையீடு இல்லாமலும் விரைவாகவும் இறுதியான சுமுக தீர்வு கட்டணமின்றி காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Pudukkottai