முகப்பு /புதுக்கோட்டை /

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு..!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு..!

X
மாதிரி

மாதிரி படம்

Vijay Makkal Iyakkam : புதுக்கோட்டை நகராட்சியின் கவுன்சிலராக உள்ள பர்வேஸ் தலைமையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் புதுக்கோட்டையில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். 

  • Last Updated :
  • Pudukkottai, India

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கர் பிறந்தநாளன்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிலையில் தற்போது ரம்ஜான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடிகர் விஜய் சார்பில், விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு அதன்மூலம் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளை விஜய் ரசிகர்காள் செய்து வருகின்றனர். முன்னதாக, நடந்து முடிந்தா ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், நகராட்சி தேர்தலிலும், மாநகராட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டு பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டு புதுக்கோட்டை நகராட்சியின் கவுன்சிலராக உள்ள பர்வேஸ் தலைமையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் புதுக்கோட்டையில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்த பேனர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லது கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஃபாதர், இந்து மத குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நோன்பு திறக்கும் தொழுகையிலும் கலந்து கொண்டனர்.இதன் பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் பிரியாணியும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    First published:

    Tags: Actor Vijay, Local News, Pudukkottai, Ramzan