ஹோம் /புதுக்கோட்டை /

இது புதுசா இருக்கே... துணிப்பையில் மழைக்கால விழிப்புணர்வு.. புதுக்கோட்டையில் புது முயற்சி..

இது புதுசா இருக்கே... துணிப்பையில் மழைக்கால விழிப்புணர்வு.. புதுக்கோட்டையில் புது முயற்சி..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News : புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் மழையின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றிய விழுப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

வடகிழக்கு பருவமழை காலதாமதமாக தொடங்கினாலும் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கன மழையும் பெய்தது.

இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. அழுகிய பயிர்களுக்கு நஷ்ட ஈடுவழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் பருவமழை தீவிரமடைந்த போது சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தில் தத்தளித்த மக்களை காக்க பேரிடர் மீட்பு படை களத்தில் உடனடியாக இறங்கியது. இதனிடையே பேரிடர் மேலாண்மை சார்பில் குறை தீர்ப்பு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு குறைகளை தெரிவித்தனர். அந்த கூட்டத்தில் இடி மின்னல் புயல் சூறாவளி வெள்ளம் தீவிபத்து போன்றவற்றின் போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்ய கூடாதவை எவை என்பதையும் துணிப்பையில் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. துணிப்பையில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றன.

இதையும் படிங்க : அனைத்து தோஷங்களையும் நீங்கும் கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் - சிறப்புகள் என்ன?

புயலின்போது எச்சரிக்கை செய்திகளை கேட்க வேண்டும் என்பதில் இருந்து துண்டித்து விழுந்த மின் கம்பிகளை மிதிக்க கூடாது, இடி மின்னலின்போது பாதுகாப்பு தேடி மரத்தடியில் நிற்க கூடாது வரை அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

மேலும் புயல், சூறாவளி நேரத்தில் நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகளையும் அந்த பையில் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மற்றும் கைபேசி செயலி tnsmart ஆகியவைகளும் பற்றிய தகவல்களும் அதில் இருந்தன. இதை பொதுமக்கள் அணைவரும் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையிலும் அதே சமயம் மழை கால விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்த மாவட்ட ஆட்சியர் செயல்பாடு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்

First published:

Tags: Local News, Pudukkottai