ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை விராலூர் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத சுகாதார நிலையம்

புதுக்கோட்டை விராலூர் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத சுகாதார நிலையம்

திறக்கப்படாத சுகாதார நிலையம்

திறக்கப்படாத சுகாதார நிலையம்

Pudukottai District News | புதுக்கோட்டை விராலூர் கிராமத்தில்  2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சுகாதார நிலையம் திறக்கப்படாததால் அவசர மருத்துவ தேவைகளுக்கு சிரமப்படும் கிராம மக்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் விராலூர் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துணை சுகாதார மையம் அமைக்கப்பட்டது. இம்மையத்தால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த சுகாதார நிலையம் செயல்படாமல் மூடிய நிலையிலேயேஉள்ளது.

  இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டபோது “கட்டிடம் மட்டுமே கட்டினார்கள். சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், குடிநீர், மின்சார வசதி போன்றவை செய்து தரவில்லை. இதனால் இந்த சுகாதார நிலையத்திற்கு மருத்துவரும், செவிலியரும் வருவதில்லை.உடனடி மருத்துவ தேவைகளுக்கு நெடுந்தொலைவு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்த சுகாதார நிலையம் செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சி அமைப்பு சுகாதார துறையும் செய்து தர வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தனர்.

  இதுகுறித்து இந்த சுகாதார நிலைய செவிலியரிடம் கேட்டபோது, “சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டவுடன் நாங்கள் உடனடியாக அங்கு வந்து பணியாற்ற தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.

  மேலும் இதுதொடர்பாக விராலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் போஸிடம் கேட்டபோது சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைந்து செய்து தர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

  செய்தியாளர்: ஸ்னேகா - புதுக்கோட்டை

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai