ஹோம் /புதுக்கோட்டை /

காலையில் ஆசிரியர் - மாலையில் சத்து மாவு விற்பனை.. கலக்கும் புதுக்கோட்டை பெண்...

காலையில் ஆசிரியர் - மாலையில் சத்து மாவு விற்பனை.. கலக்கும் புதுக்கோட்டை பெண்...

X
சத்து

சத்து மாவு தயாரிக்கும் ஆசிரியர்

Pudukottai Business Woman | புதுக்கோட்டை மாவட்டம் பூதகுடியை சேர்ந்த ஆசிரியர் கோமதி, வீட்டில் 25 வகையான சிறு தானியங்களை கொண்டு சத்து மாவு தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 வகையான சிறு தானியங்களை கொண்டு சத்து மாவு செய்து விற்பனை செய்து வருகிறார் புதுக்கோட்டை ஆசிரியர் கோமதி.

புதுக்கோட்டை மாவட்டம் பூதகுடியை சேர்ந்தவர் கோமதி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளி செல்லும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில் வீட்டில் 25 வகையான சிறு தானியங்களை கொண்டு சத்து மாவு தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். 1 கிலோ 350 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார். இந்த ஐடியா எப்படி வந்தது என்பது பற்றி கோமதியிடம் கேட்டோம்.“ இன்றைய குழந்தைகள் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.

இதனால் சிறு வயதிலேயே அதிக அளவில் உடல் எடை கூடி பல நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்க நாம் நம் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். ஆனால் சிறு தானியங்களின் பயன்பாடு வீட்டில் மிகவும் அரிதாகி விட்ட நிலையில் அதை மீண்டும் கொண்டு வரும் நோக்கில் சிறு தானியங்களைக் கொண்டு இந்த சத்து மாவு தயாரித்து வருகிறேன்.

இது வெறும் வியாபாரத்திற்காக மட்டுமல்லாமல் குழந்தைகளின் நன்மையும் கருத்தில் கொண்டு இந்த வேலையில் நான் ஈடுபடுகிறேன். சிறுதானியங்களை நாம் உட்கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அது வழங்குகிறது. அதேபோன்று சிறுதானியங்கள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு உயர்த்துகிறது. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளையும் குறைத்து விட்டு உடல் பருமன் மற்றும் இதய நோய்களையும் தடுக்கிறது.

நான் தயாரிக்கும் சிறுதானிய மாவில் 25 வகையான தானியங்கள் சேர்க்கப்படுகின்றது. அதாவது கம்பு ,கேழ்வரகு, சோளம், வரகு அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி அரிசி, தினை அரிசி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி ,கைக்குத்தல் அரிசி, கேரளா மட்டை அரிசி ,துளசி, பச்சரிசி, ஜவ்வரிசி வெள்ளை சோளம், மக்காச்சோளம், வெள்ளை சோயா, ராஜ்மா, பாசிப்பயறு, கருப்பு கொண்டை கடலை, கருப்பு உளுந்து, பொட்டுக்கடலை, பார்லி அரிசி ,சுக்கு ஏலக்காய், வறுத்த நிலக்கடலை போன்ற சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றன. அதை வெயிலில் காய வைத்து முளை கட்ட வேண்டிய தானியங்களை முளைகட்டி அதனையும் வெயிலில் காயவைத்து கை பொறுக்கும் அளவு சூட்டில் பக்குவமாக வறுத்து எடுத்து அந்த சிறு தானியங்களை அரவை இயந்திரத்தில் போட்டு நன்கு தூளாக அரைத்து அதை சலித்து சுத்தம் செய்து பாக்கெட்டுகளில் காற்று புகாத வாரு அடைத்து விற்பனை செய்கிறேன் .

மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வைத்தும் வியாபாரத்தில் லாபத்தையும் ஈட்டி வருகிறார் என்பதில் எனக்கு ஒரு திருப்தி. சத்து மாவு மட்டுமல்லாது இதர பொருட்களான ஆவாரம் பூ, மஞ்சள் சீகக்காய் பொடி மற்றும் பல மூலிகை சம்பந்தமான பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறேன். வியாபாரத்திற்காக மக்களின் ஆரோக்கியத்தை அடகு வைக்க நான் விரும்பவில்லை என் பொருட்களை மக்கள் வாங்கினால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது என்பதில் ஆசிரியரான எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான் என பேசினார்.

First published:

Tags: Local News, Pudukkottai, Teacher