முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / சுட்டெரிக்கும் கோடை வெயில் : புதுக்கோட்டையில் தண்ணீர் பந்தல் அமைக்க கோரிக்கை!

சுட்டெரிக்கும் கோடை வெயில் : புதுக்கோட்டையில் தண்ணீர் பந்தல் அமைக்க கோரிக்கை!

கோடை வெயில்

கோடை வெயில்

Pudukottai News | அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெயிலின் தாக்கத்தால் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல், குடிதண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் வரக்கூடிய நாட்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வெயிலை கண்டு மக்கள் அஞ்சி நடுங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் சுட்டெரிக்கும் கோடை வெயில் அனல் தகித்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெயிலின் தாக்கத்தால் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பணிகளுக்காகவும் வெயிலில் வெளியே வரும் மக்கள் சாலை ஓரங்களில் உள்ள நொங்கு கடை கரும்பு ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் குவிந்து தங்களது தாகத்தை தணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அங்கன்வாடியில் இனி 3 வகைகளில் சத்துமாவு.. புதுக்கோட்டை அலுவலர் விளக்கம்!

 மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களுக்கு எதுவாக தமிழ்நாடு அரசு ஆங்காங்கே தண்ணீர் பந்தல் மற்றும் தண்ணீர் தொட்டி அமைத்து பொதுமக்களை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:  ர.ரியாஸ்

First published:

Tags: Local News, Pudukottai