ஹோம் /புதுக்கோட்டை /

சாலை ஓரங்களில் கரும்பு விற்பனை.. வியாபாரிகளாக மாறிய புதுக்கோட்டை இலுப்பூர் பகுதி விவசாயிகள்..

சாலை ஓரங்களில் கரும்பு விற்பனை.. வியாபாரிகளாக மாறிய புதுக்கோட்டை இலுப்பூர் பகுதி விவசாயிகள்..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை விவசாயிகள்

Pudukkottai News : புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், மேட்டு சாலை , வீரப்பட்டி போன்ற ஊர்களை சேர்ந்த விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த கரும்பு கட்டுகளை கொண்டுவந்து சாலையில் விற்பனை செய்து வருகின்றனர் கரும்பு விவசாயிகள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

வருடம் தோறும் அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் தவராது இடம்பெறும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட தமிழக அரசு பொங்கல் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குகிறது.

அதில் கரும்பும் இந்த ஆண்டும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவே கரும்பை அரசு கொள்முதல் செய்து கொள்கிறது. இருப்பினும் கூடுதல் வருவாய் ஈட்ட விவசாயிகளை கரும்பை அறுவடை செய்து கட்டாகவோ அல்லது ஒன்றை மட்டும் தனியாகவோ பொதுமக்களுக்கு நேரடியாக சாலை ஓரங்களில் நின்று விற்பனை செய்து வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதி விவசாயிகள்.

இதுகுறித்து இலுப்பூர்  பகுதியை சேர்ந்த விவசாயி துரைசாமி பேசியது, “நாங்கள் 10 வருடங்களுக்கு மேலாக கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்யும். அதேபோல் இந்த ஆண்டும் அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படிங்க : தீண்டாமை சர்ச்சைக்குள்ளான கோயிலில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு : அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

மேலும் நாங்கள் இந்த சாலையோரங்களில் பொதுமக்களிடம் நேரடியாக கரும்பை விற்பனை செய்வது எங்களுக்கு கூடுதலாக வருமானம் இருக்கும் என்பதற்காக தான்” என்று கூறினார்.

அதேபோல் மற்றொரு விவசாயி வெள்ளைச்சாமி, “கரும்பு விவசாயத்திற்கு நாங்கள் நிறைய செலவு செய்துள்ளோம். அதை ஈடுகட்ட அரசுக்கு கொடுப்பது போக மீதமுள்ள கரும்புக் கட்டுகளை மொத்தமாகவோ சில்லறையாகவோ சாலையோரங்களில் விற்பனை செய்து வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் மூலம் எங்களால் கூடுதல் வருவாய் ஈட்ட முடிகிறது. செலவுகளை ஓரளவு சரிகட்டி லாபம் பார்க்க முடிகிறது. அதேபோல் அரசு கொடுக்கும் கொள்முதல் விலை மொத்தமாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளுக்கு வந்து சேர்வதை அரசாங்கம் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

செய்தியாளர் : சினேகா விஜயன் - புதுக்கோட்டை

First published:

Tags: Local News, Pudukkottai