முகப்பு /புதுக்கோட்டை /

தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கு அன்னபூரணியாக மாறிய புதுக்கோட்டை செல்வராஜ்..

தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கு அன்னபூரணியாக மாறிய புதுக்கோட்டை செல்வராஜ்..

X
அன்னதானம்

அன்னதானம் வழங்கும் முதியவர் 

Pudukottai Selvaraj | விராலிமலை அருகே சாலையோர மக்களுக்கு உணவு சமைத்து இலவசமாக வழங்கி வருகிறார் முதியவர் ஒருவர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வீடு இல்லாமல் தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார் முதியவர் செல்வராஜ்.ஒல்லியான உடல்வாகு, ஒரே ஒரு சைக்கிள், ஏழைகளுக்கு அன்னபூரணி, மக்கள் பணி, இவ்வாறாக இந்த பகுதியில் அறியப்படுபவர் தான் செல்வராஜ். விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் சத்திரத்தை சேர்ந்தவர் தான் செல்வராஜ். விவசாயிகள் போராட்டங்கள், கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்குவது என பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக விராலிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அளிக்கும் நிதி உதவியை வைத்து அவரே விதவிதமான உணவுகளை அதாவது தக்காளி சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், புளி சாதம் என சமைத்து யாசகம் பெற்று வாழ்பவர்களை தன் மிதிவண்டியிலேயே 15 கிலோ மீட்டர் தூரம் வரை தேடி சென்று சென்று உணவளித்து வருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது மட்டும் இன்றி இவர் தொடர்ந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதால் அன்னதானம் வழங்கும் பணியை தினந்தோறும் மேற்கொள்ள முடியவில்லை என்றும் நிதி உதவி இன்னும் அதிக அளவில் கிடைத்தால் வாரத்தில் ஒரு நாள் என்பது இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து அன்னதானம் அளிக்க முடியும் என கூறினார். முதுமை அவரை உடல் அளவில் களைப்படைய செய்தாலும், மனதளவில் அவருக்கும் இருக்கும் உறுதியால் மேலும் பல மக்கள் நல பணிகளை தொடர்ந்து சிறப்பாக செய்வார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

First published:

Tags: Local News, Pudukottai