ஹோம் /புதுக்கோட்டை /

தூரிகை நாயகியாக வலம் வரும் புதுக்கோட்டை பயிற்சி மருத்துவர் கீர்த்தனா..

தூரிகை நாயகியாக வலம் வரும் புதுக்கோட்டை பயிற்சி மருத்துவர் கீர்த்தனா..

X
பயிற்சி

பயிற்சி மருத்துவர் கீர்த்தனா

Pudukkottai District News : மருத்துவம் படித்துக்கொண்டே ஓவியம் வரைந்து சம்பாதிக்கும் புதுக்கோட்டை மாணவி கீர்த்தனா.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியில் ஜெனரல் அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து குறித்து படித்து வருகிறார் மாணவி கீர்த்தனா.

மருத்துவ படிப்புக்கு பின் அவருக்கு மிகவும் பிடித்தது ஓவியம் தான். சிறுவயது முதலே ஓவியத்தில் ஆர்வம் இருந்த நிலையில் பள்ளி படிக்கும் போதே சிறு சிறு படங்கள் வரைய தொடங்கியுள்ளார்.

பள்ளி முடிந்தவுடன் பெற்றோர்கள் மருத்துவ துறையில் சேர்த்துள்ளனர். ஓவியக் கலையில் ஆர்வம் உடைய கீர்த்தனா மருத்துவ துறையில் படித்தாலும் தனது ஓவிய கலையை விடவில்லை.

கீர்த்தனாவுக்கு ஓவியக் கலையை மேலும் வளர்க்க கொரோனா ஊரடங்கு காலம் கிடைத்தது அதில் யூடியூப் சமூக வலைதளத்தின் மூலம் தனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார் கீர்த்தனா.

இதையும் படிங்க : மீன்வளத்துறையின் அறிவிப்பை ஏற்று கடலுக்கு செல்லாத கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள்..

அதன் பின் தனது திறமையை மேம்படுத்தி கொண்டு அதையே ஒரு சுய தொழிலாக ஆரம்பித்தார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது ஓவியங்களை பதிவிட்டார்.

ஓவியங்களை பிடித்துப்போகவே அதை நல்ல விலைக்கும் மக்கள் வாங்கினர். இவரின் ஓவியங்களுக்கு மக்களிடையே வரவேற்பும் கிடைத்தது. இதன் மூலம் வருமானமும் வரத்தொடங்கியது.மருத்துவத்துறையில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஓவிய ஆர்டர்களையும் செய்து கொடுத்து வந்தார்.

தனக்கு தேவையான செலவுகளையும் விடுதிக்கான செலவுகளையும் அந்த ஆர்டர்களில் வரும் பணத்தை வைத்து பார்த்துக் கொண்டு வருவதாகவும், அதன் மூலம் விவசாயத்தில் இருந்து வரும் சொற்ப வருமானத்தை வைத்து சிரமப்படும் பெற்றோர்களுக்கு சற்று நிம்மதி கொடுக்கலாம் அல்லவா? என புன்னகை பூத்தார் கீர்த்தனா.

இதோடு நிற்காமல் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக விழிப்புணர்வு படங்களையும் இனி வரும் காலங்களில் வரைய இருப்பதாக தெரிவித்தார்.

சமூக சேவையில் வந்த நாட்டம் குறித்து கீர்த்தனா கூறுகையில் “சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்கள் சரிசமமாக நடத்தப்பட்டாலும் அந்த நிலை கடைகோடி தமிழகம் வரை இருக்க வேண்டும். பெண்ணடிமைத்தனம்.

பெண் தொழிலாளர்களுக்கு உதியம் குறைவு, வரதட்சனை கொடுமை என பல இடங்களில் பெண்களின் சுதந்திரம் மற்றும் சமபாலினம் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற வரையில் எனக்கு தெரிந்த வரையில் ஓவியம் மூலம் போராடுவேன்.

நான் என்னுடைய விழிப்புணர்வு ஓவியங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். எனக்கான அங்கீகாரமும் அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்புபும் கிடைத்தால் இந்த உலகத்தை நிச்சயம் மாற்றுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கீர்த்தனா.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்திற்கேற்ப அவர்களை செயல்படவிட வேண்டும். மேலும் குழந்தைகள் தாங்கள் நினைத்த துறையில் சாதிக்க அவர்களை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களுக்கு ஊந்துக்கோலாக இருந்தால் பிள்ளைகள் நிச்சயம் சாதிப்பார்கள் என்று கூறி தன் விடுதி அறையை நோக்கி புறப்பட ஆயத்தமானார் தூரிகை நாயகி கீர்த்தனா.

புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்

First published:

Tags: Local News, Pudukkottai