முக்கனிகளில் முக்கிய இடம் பிடித்துள்ள பலாப்பழத்தின் சுவைக்கு மயங்காத மனிதர்களே இல்லை ஏன் யானைகள், குரங்குகள், அணில்கள் ஆகியவற்றிற்கும் இது மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. இதன் சுவையும் வாசமும் அனைவரையும் விரும்பி உண்ண வைக்கிறது. மரங்களில் காய்க்கும் இந்த பெரிய பழங்கள் முறையாக வெகு சில இடங்களில் தான் விவசாயம் செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் பலாப்பழ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 200 ஏக்கருக்கு மேலாக பலாப்பழ மரங்கள் வைக்கப்பட்டு பலா சாகுபடி நடைபெற்று வருகிறது. பண்ருட்டிக்கு அடுத்தப்படியாக புதுக்கோட்டை வடகாடு கிராமத்தில் தான் அதிக அளவில் பலாப்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது.
இது குறித்து பேசிய அப்பகுதி விவசாயி பாலகிருஷ்ணன், ”பண்ருட்டி பலாக்களை விட எங்க ஊரில் விளையும் பலாப்பழத்திற்கு சுவை அதிகம். நான் 20 வருடங்களுக்கு மேலாக இந்த பலாப்பழ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன்.
நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த பலாப்பழ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் மாதத்திற்கு 20,000 முதல் 30,000 வரை வருவாய் ஈட்டி வருகிறேன். மேலும் அதிக அளவில் செலவுகள் இதில் இல்லை. இதன் பராமரிப்பு மிகவும் எளிது அதாவது மாதத்திற்கு 2 முறை தண்ணீர் விட்டால் போதுமானது. பலா பிஞ்சு வைக்கும் போது மட்டுமே சற்று அதிக கவனம் தேவை மற்ற நேரங்களில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் மும்பை முதல் வேலூர் தூத்துக்குடி மதுரை போன்ற மாவட்டங்கள் வரை அனுப்பி வைக்கப்படுகிறது. ஊடுபயிராக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மற்ற பயிர்கள் வைக்க முடியும்.மேலும் இங்கு முற்றிலும் இயற்கை முறையில் மட்டுமே இந்த பலா விவசாயம் நடைபெறுகிறது.
2018 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த பழம் என்ற பெயர் பெற்றது என் தோட்டத்தில் உள்ள பலாப்பழம் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.இயற்கை முறையில் பயிரிடுவதால் தான் என்னவோ இந்த பலாவிற்கு ருசி அதிகம் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே அவர் பேச்சை மீண்டும் கேட்டோம்.மேலும் இந்த பலாப்பழத்திற்கு விற்பனை வாய்ப்பு அதிகரித்தால் நாங்கள் இன்னும் அதிகமான அளவிற்கு இதனை சாகுபடி செய்ய திட்டம் உள்ளது. தற்போது இதனை எங்கள் வியாபாரத்திற்கு ஏற்றவாறு குறைந்த அளவில் பலாப்பழம் விளையும் மாறு கட்டுப்பாட்டுக்குள் வைத்து சாகுபடி செய்து வருகிறோம்” என்றும் விவசாயி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பலாப்பழங்களை மற்றும் மாவட்டங்களுக்கு, மாநிலங்களுக்கு அனுப்பும் போது அதன் போக்குவரத்திற்கு அதிக அளவில் செலவழிக்க வேண்டி உள்ளது அதற்கு அரசு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளை வைத்து நம்மிடமிருந்து விடைபெற்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jack Fruit, Local News, Pudukkottai