ஹோம் /புதுக்கோட்டை /

மழைக்காலத்தில் ஒழுகும் புதுக்கோட்டை அரசு பள்ளியின் அவலம்.. மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம்....

மழைக்காலத்தில் ஒழுகும் புதுக்கோட்டை அரசு பள்ளியின் அவலம்.. மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம்....

புதுக்கோட்டை அரசு பள்ளி

புதுக்கோட்டை அரசு பள்ளி

Pudukkottai District News : விராலிமலையில் உள்ள இடைப்பட்டியில்  கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் பள்ளிக்கு வர ஆசிரியர்களும் மாணவர்களும் அஞ்சுகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள இடைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் பள்ளிக்கு வர ஆசிரியர்களும், மாணவர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தாலுகாவில் உள்ள தேங்காய்தின்னிபட்டி ஊராட்சியில் உள்ள இடைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.

  இந்நிலையில், பள்ளியின் மேற்கூரை சேதமடைந்து இருப்பதால் மழை பெய்யும்போது மழைநீர் கசிந்து மாணவர்கள் மீது விழுகிறது. இதனால் அவர்கள் கற்பதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சுவற்றிலும் சில இடங்களில் விரிசல் வந்துள்ளது.

  இதன் வழியாகவும் மழைநீர் வகுப்பறைகளுக்குள் வருகிறது. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருவித அச்ச உணர்வும் ஏற்படுகிறது.

  இதையும் படிங்க : சினிமாவில் பல விருதுகளை அள்ளிய தம்பி ராமையாவின் பூர்வீக ஊர் இது தானா?... அட இது தெரியாம போச்சே..

  இதுகுறித்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூறும்போது “நாங்கள் எல்லாம் விவசாயிகள், எங்களிடம் தனியார் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க போதிய வசதி இல்லை. ஆனால் எங்களை போல் இல்லாமல் எங்கள் பிள்ளைகளாவது படித்து பட்டதாரிகள் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

  இதனால் தான் பிள்ளைகளை இங்கு படிக்க அனுப்புகிறோம். ஆனால் பள்ளி கட்டிடம் உள்ள நிலைமையை பார்த்தால் பிள்ளைகளை படிக்க அனுப்பவே பயமாக இருக்கிறது.

  உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த பள்ளி கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறையோ அல்லது ஊராட்சி நிர்வாகமோ புனரமைத்து தர வேண்டும். எங்கள் பிள்ளைகள் நிம்மதியாக படிக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்” என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை கண்ணுவை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது,“நான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பள்ளியை பார்வையிட்டு வந்தேன். போர்க்கால அடிப்படையில் பள்ளி கட்டிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

  இதையும் படிங்க : 'அந்த மனசுதான் கடவுள்'.. கஷ்டம் கொடுத்த நடத்துநர் மீது நடவடிக்கை வேண்டாமென கூறிய மாற்றுத்திறனாளி!

  விரையில் கட்டிடத்தில் அதை செய்தும் முடிப்பேன். அதேபோல் பள்ளிக்கு சில அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது அதையும் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன்.

  பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதை அதிகப்படுத்த பள்ளியில் ஒரு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகிறேன். விரையில் பள்ளி புதுப்பொலிவுடம் காணப்படும்“ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  ஊராட்சி மன்ற தலைவர் நம்பிக்கையாய் சொன்ன வார்த்தைகள் செயல் வடிவம் பெற வேண்டும் என்பது தான் அணைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

  புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai