ஹோம் /புதுக்கோட்டை /

Pudukkottai | நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் - பரம்பூர் கிராம விவசாயிகள் கோரிக்கை

Pudukkottai | நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் - பரம்பூர் கிராம விவசாயிகள் கோரிக்கை

X
வயல்

வயல் வெளி

Pudukkottai | புதுக்கோட்டை பரம்பூர் கிராம மக்கள் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று புதுக்கோட்டை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தால் மகிழ்ச்சி என்றாலும் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் மையங்கள் ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். அதேபோல் மாநிலம் முழுவதும் நெல் சாகுபடி காலத்தில் தற்காலிகமாகவும் இவை திறக்கப்படும்.

பொதுவாக ஒரு நேரடி கொள்முதல் மையம் சுமார் 33 சென்ட் பரப்பளவு மற்றும் 100 மெட்ரிக் சேமிப்பு வசதி, உலர்த்தும் தளம், வின்னோவிங் மெஷின், மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பதம் மீட்டர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். புதுக்கோட்டையிலும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தான் போடுகின்றனர்.

பரம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னையா தெரிவிக்கையில், “எங்கள் பரம்பூர் கிராமத்தில் 400 ஏக்கர்க்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் எங்கள் கிராமத்தில் செயல்படுகிறது. நாங்கள் அறுவடை செய்த நெல்லை நேரடியாக அரசின் டி.பி.சி கொள்முதல் செய்கிறது. இதனால் எங்களுக்கு எந்த இடைத்தரகர்கள் பிரச்சனையும் இல்லாமல் நல்ல விலைக்கு அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது. இதனால் விவசாயிகளாகிய எங்களுக்கு மகிழ்ச்சி. அரசின் நேரடி கொள்முதல் திட்டத்தால் பரம்பூர் கிராம விவசாயிகள் மிகுந்த பயன் அடைந்துள்ளோம். மேலும் இந்த டிபிசி நிரந்தரமாக அமைத்து தர வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கின்றனார்.

செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.

First published:

Tags: Local News, Pudukkottai