ஹோம் /புதுக்கோட்டை /

விராலிமலையில் பெண்களுக்கு இலவசமாக கால் மிதியடி தயாரிப்பு பயிற்சி..

விராலிமலையில் பெண்களுக்கு இலவசமாக கால் மிதியடி தயாரிப்பு பயிற்சி..

X
கால்மிதியடி

கால்மிதியடி பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெண்கள் 

Pudukkottai News: ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பயிற்சி பெற்று தொழில் முனைவோராக மாறி வரும் புதுக்கோட்டை மாவட்ட பெண்கள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கு  இலவசமாக கால் மிதியடி தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஆரி ஓர்க் பயிற்சி 25 பெண்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற பெண்களில் பலரும் சுயமாக தொழில் மேற்கொண்டு வருகிறார்கள். வீட்டில் வீணாக உள்ள பழைய துணிகளைக் கொண்டு மின்சாரம் இல்லாமல் இயங்கும் தறி இயந்திரத்தின் மூலம் கால் மிதியடி செய்தல், பழைய புடவையைக் கொண்டு கைகள் மூலம் செய்யும் மிதியடி மற்றும் சணல் கயிறு கொண்டு செய்யும் மிதியடி போன்ற பயிற்சிகளை பெற்றும் வருகின்றனர்.

இதுதிட்டத்தில் பயிற்சி பெறும் பெண்கள் கூறுகையில், “ இந்த பயிற்சி திட்டங்கள் மூலம் எங்களின் வாழ்வாதாரம் உயரும். எங்களை தொழில்முனைவோராக உருவாக்கி வருகிறார்கள். இதன்மூலம் நாங்கள் பொருளாதார வளர்ச்சி அடைகிறோம். குடும்பத்திற்கு எங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்கிறோம். ” என்றனர்

மேலும் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கு பிறரிடம் இருந்து எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இன்றி எங்களது தேவைகளை பூர்த்தி செய்ய இந்த வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் கிடைக்கும் பயிற்சி அமைகிறது எனக் கூறினர்.

First published:

Tags: Entrepreneurship, Local News, Pudukkottai, Tamil News, Woman