ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் நாளை (நவம்பர் 22) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

புதுக்கோட்டையில் நாளை (நவம்பர் 22) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Pudukkottai District News | புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாத்தனூர் பகுதிகளில் நாளை செவ்வாய்கிழமை (நவம்பர் 22) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்... ஏன் தெரியுமா?

காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலலை மாத்தனூர் உதவி பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமிஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி, சஞ்சீவிராயர் கோவில் பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukkottai