ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி... வரும் 14ம் தேதி  நடக்கிறது...

புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி... வரும் 14ம் தேதி  நடக்கிறது...

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukottai news : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு வரும் 14ம் தேதி பேச்சுப்போட்டி நடப்பதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வரும் 14ம் தேதி பேச்சுப்போட்டி நடப்பதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ் வளர்ச்சி துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2022-23ம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப்பள்ளிகள், கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்கு தனித்தனியே அரசு விதிமுறைகளின் படியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வரும் 14ம் தேதி (திங்கள் கிழமை) அன்று புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

மேலும், இந்த போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித் தனியே பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.

இதையும் படிங்க : புதுக்கோட்டை விவசாயிகளே தோட்டக்கலை பயிர்களை காக்க இதை செய்யுங்கள்...!

கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (04322-228840, 99522 80798) தொடர்பு கொள்ளலாம்.

இப்பேச்சுப்போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukkottai