மாண்டஸ் புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மை குழுக்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு, கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் மற்றும் மக்களுக்கு வரவிருக்கும் சூறாவளி குறித்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ.பானுப்ரியா பேசுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்களின் அனைத்து சிறப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் கன மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.
ரப்பர் boat மற்றும் மிதவைகள், பவர் ஷா, பம்புகள், அவசரகால விளக்குகள், hydraulic cutter, lifebuoy, lifejacket, நீட்டிப்பு ஏணி, rope ladder, Manila ropes அனைத்தும் இயக்கி சரிவர நிலையில் உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளோம்.
கூடுதலாக 40 பவர் சா வேளாண் துறையில் இருந்து பெறப்பட்ட உள்ளது.மரம் விழுந்து இருந்தால் உடனடியாக துரிதமாக அதை அப்புறப்படுத்துவதற்கு தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் உள்ளார்கள். அவசியம் இல்லாமல் எவருக்கும் விடுப்பு வழங்கப்படவில்லை“ என கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பது குறித்தும் அறிவிப்புகளும் புதுக்கோட்டை கடலோர பகுதிகளில் வசிக்கும் கிராமங்களில் உள்ள மீனவர்கள் மற்றும் மக்களுக்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா விஜயன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai