ஹோம் /புதுக்கோட்டை /

Pongal 2023 : பொங்கல் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற புதுக்கோட்டை ஆட்சியர்..

Pongal 2023 : பொங்கல் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற புதுக்கோட்டை ஆட்சியர்..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukottai News : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம்.

தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஜனவரி 15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் பல்வேறு வகையான அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதன்படி உரி அடித்தல், கயிறு இழுத்தல், சிலம்பம் சுற்றுதல், பாடல், நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மேலும், போட்டிகளில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவரும் அலுவலர்களுடன் சேர்ந்து கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

First published:

Tags: Local News, Pongal 2023, Pudukkottai