ஹோம் /புதுக்கோட்டை /

குடிநீர் குழாய் இணைப்பு பெற வேண்டுமா? புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

குடிநீர் குழாய் இணைப்பு பெற வேண்டுமா? புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Pudukkottai District Latest News | ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் இணைப்பு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

குடிநீர் இணைப்பு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜல் ஜீவன் மிஷன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒருநபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் பாதுகாப்பான தூய குடிநீர் வழங்கி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை 2024 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்து தன்னிறைவு பெற்ற மாவட்டமாக அறிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கு 146 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 579 குக்கிராமங்களில் குடிநீர்குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு என சமூக பங்களிப்பாக ரூ.5.006 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது.

ஜல் ஜீவன் மிஷன் 2022 - 23 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 45 ஊராட்சிகளுக்குட்பட்ட 81 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென மொத்த மதிப்பீட்டில் சமூக பங்களிப்பாக ரூ.1.09 கோடி மதிப்பில் பெற வேண்டியுள்ளது.

Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட குக்கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்களிப்பினை அந்தந்த கிராம ஊராட்சிமன்ற அலுவலகத்தில் செலுத்திட தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் பொதுமக்களிடம் சமூக பங்களிப்பு பெறுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊராட்சிகளிலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் போன்ற அமைப்புகள் பங்கெடுத்து பொதுமக்களிடமிருந்து சமூக பங்களிப்பு பெறுவதற்கான உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Drinking water, Local News, Pudukkottai