முகப்பு /புதுக்கோட்டை /

திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டா, நரிக்குறவர்களுக்கு நிதியுதவி வழங்கிய புதுக்கோட்டை ஆட்சியர்...

திருநங்கைகளுக்கு வீட்டுமனைப் பட்டா, நரிக்குறவர்களுக்கு நிதியுதவி வழங்கிய புதுக்கோட்டை ஆட்சியர்...

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு நிதியுதவியை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, கறம்பக்குடி தாலுகா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வெள்ளனூர் ஊராட்சி ரெங்கம்மாள் சத்திரம் கிராமத்தில் வசிக்கும் 95 நரிக்குறவர் சமூக மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவரது விருப்ப நிதியிலிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா பத்தாயிரம் மதிப்பீட்டில் இரண்டு ஆட்டுக்குட்டிகளை வழங்கினார். மேலும், தலா 5,000 ரூபாய் வீதம் பாசி உற்பத்தி செய்து கடைகளில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக துளசி, மணி பாசி செய்வதற்கான ஒரு மாதத்திற்கு தேவையான மூலப்பொருட்களையும் வழங்கினார்.

மேலும், காமராஜபுரத்தை சேர்ந்த 51 நபர்களுக்கு 5,000 ரூபாய் மதிப்பீட்டில் வாழ்வாதாரத்திற்கான பொருட்களை ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சித் தலைவரிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்ட நரிக்குறவர் சமூக மக்கள், துளசி மணி, பாசி மணியை ஆட்சியருக்கு அணிவித்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

சுட்டெரிக்கும் கோடை வெயில் : புதுக்கோட்டையில் தண்ணீர் பந்தல் அமைக்க கோரிக்கை!

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கவிதா ராமு கிளம்பிய நேரத்தில் அங்கிருந்த திருநங்கைகள், ‘நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்.. என்று கூறி தங்களின் அன்பினை வெளிப்படுத்தினர். அதேபோல ஆட்சியரும் வெயில நிக்காதீங்க என்று பதிலுக்கு அவருடைய அன்பை வெளிப்படுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

First published:

Tags: Local News, Pudukkottai