ஹோம் /புதுக்கோட்டை /

வீட்டுக்கு வீடு காளை.. புதுக்கோட்டை மெய்க்கவுண்டம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்காக தயாராகும் காளைகள்

வீட்டுக்கு வீடு காளை.. புதுக்கோட்டை மெய்க்கவுண்டம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்காக தயாராகும் காளைகள்

X
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு காளைகள்

Pudukottai Jallikattu Bulls : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் வருகிற ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் இறங்க புதுக்கோட்டை மாவட்ட காளைகளுக்கு சத்தான உணவு மற்றும் தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

பொங்கல் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த மெய்க்கவுண்டம்பட்டி கிராம மக்கள் தங்களுடைய காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தயார் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் காளைகள் இருப்பதைக் காண முடிகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற குறைந்த அளவிலான நாட்களே உள்ள நிலையில் கிராமத்து இளைஞர்கள் தங்களது காளைகளை தயார் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ராமு என்ற காளையை வளர்க்கும் அழகர்சாமி கூறும்போது, “பரம்பரை பரம்பரையாக காளைகளை வளர்த்து வருகிறோம் . அதில் நான் இந்த ராமுவை 4 வருடங்களாக வளர்த்து வருகிறேன். பலமுறை வாடி வாசல் பார்த்துள்ளான் ராமு. வாடிவாசலில் இதன் தோற்றத்தை பார்த்து காளையர்கள் கலங்கி போவர்.

இதையும் படிங்க : தீண்டாமை சர்ச்சைக்குள்ளான கோயிலில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு : அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

இதுவரை எந்த போட்டிகளிலும் பிடிமாடாக ஆனது இல்லை. நின்று விளையாட்டு விட்டு தான் வருவான். அதேபோல் வாடியில் சினம் கொண்ட சிங்கமாக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுடன் குழந்தையாய் இருக்கும். குழந்தைகள் ராமுவுடன் கொஞ்சி முத்தமிட்டு விளையாடுவார்.

மேலும் தற்போது ராமுவிற்கு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு தீவிரமாக பயிற்சியும் அதற்கு ஏற்ற வகையில் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது காலையில் நடைபயிற்சி மண்மேடு அமைத்து முட்ட விடுவது, நீச்சல் பயிற்சி, மற்றும் கடலை மிட்டாய், வாழைப்பழம் போன்ற உணவுகள் வழங்கி வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காளைக்கு தினசரி 300 ரூபாய் வரை செலவாகிறது. இருந்தாலும் இதை நாங்கள் ஒரு செலவாக காண்பதில்லை” என்று தெரிவித்தார்.

செய்தியாளர் : சினேகா விஜயன் - புதுக்கோட்டை

First published:

Tags: Local News, Pudukkottai