ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை புதுக்குளம் பூங்காவின் அடையாளமாக திகழும் மீனா பாட்டி

புதுக்கோட்டை புதுக்குளம் பூங்காவின் அடையாளமாக திகழும் மீனா பாட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதுக்குளம் பூங்கா

Pudukkottai Pudukulam Park | புதுக்கோட்டை நகரில் தற்போதைய இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்து இருப்பவர் இந்த மீனா பாட்டி..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதுக்கோட்டை நகரின் மையத்தில் அமைந்துள்ள  புதுக்குளம் பூங்காவானது பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும்,  பிரதான சுற்றுலாத் தலம் போல திகழ்கிறது.

இந்தப் புதுக்குளம் பூங்காவிற்குப் பல அடையாளங்கள் இருந்தாலும், இங்கு வரும் சிறுவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது அங்கு ஓரமாக மிட்டாய்களையும், மாங்காய்களையும் அடுக்கி விற்றுக் கொண்டிருக்கும் மீனா பாட்டி தான்.

ஏறத்தாழ 80 வயதைத் தொட்டு விட்ட மீனா பாட்டி  கடலை மிட்டாய், எள் மிட்டாய், தேன் மிட்டாய், சின்ன சின்ன பிஸ்கட்கள் என ஆரம்பத்தில் புதுக்கோட்டை நகரிலுள்ள சர்ச்சின் அருகிலும் அடுத்து பிற பகுதிகளிலும் விற்பனை கொண்டிருந்தார், பின்னர் புதுக்குளம் பூங்காவிற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் வியாபாரத்திற்கு வந்திருக்கிறார்.

மேலும் படிக்க:  கீரமங்கலம் நரிக்குறவர் காலனி மாணவர்களை சொந்த காரில் பள்ளியில் இறக்கிவிடும் வட்டார கல்வி அலுவலர்..

அப்போதிலிருந்து நுழைவாயிலின் அருகே சிறிய விரிப்பு ஒன்றில் தனது கடையை வைத்து சிறுவர்களை கவரக்கூடிய மிட்டாய்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மாங்காய் போன்றவற்றை விற்று வருகிறார்.  தற்போதைய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பதவியேற்ற பின்னர் நேரடியாக வந்து பாட்டியைப் பார்த்து அவருக்கு ஒரு சிறிய தள்ளு வண்டியில் கடை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

மீனா பாட்டி

அந்த கடை பகல் நேரத்தில் வெயிலில் இருப்பதால் பகல் நேரங்களில் பாட்டி பழைய இடமான நுழைவு இடத்தின் அருகிலேயே விரிப்பு ஒன்றில் தனது வியாபாரத்தை தொடர்ந்து வருகிறார். வெயில் இல்லாத சமயங்களில் அந்த கடையில் தனது வியாபாரத்தை தொடர்கிறார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகள் தனக்கு உதவி வருவதாகவும், இதற்காக தான் என்றும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன் எனவும் மீனா பாட்டி தெரிவிக்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதுக்கோட்டை நகரில் தற்போதைய இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்து இருப்பவர் இந்த மீனா பாட்டி என்றால் அது மிகையாகாது..

Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai