ஹோம் /புதுக்கோட்டை /

ஜல்லிக்கட்டு `தில்’ இருந்தா மல்லுக்கட்டு - களம் இறங்க தயாராகும் புதுக்கோட்டை காளைகள்

ஜல்லிக்கட்டு `தில்’ இருந்தா மல்லுக்கட்டு - களம் இறங்க தயாராகும் புதுக்கோட்டை காளைகள்

 “ஜல்லிக்கட்டு - தில் இருந்தா மல்லுகட்டு”சண்டிவீரன் காளை 

 “ஜல்லிக்கட்டு - தில் இருந்தா மல்லுகட்டு”சண்டிவீரன் காளை 

கிராமத்து இளைஞர்கள் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தாயார் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரீரு மாதங்களே உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜகிரி கிராம மக்கள் தங்களுடைய காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தயார் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

  இந்த கிராமத்தில் வீடுதோறும் காளைகள் வளர்க்கப்படுவதை காண முடிகிறது. கிராமத்து இளைஞர்கள் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தாயார் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  சண்டிவீரன் என்ற காளையை வளர்க்கும் சிவா கூறும் போது “ நான் ஜல்லிக்கட்டு போட்டிகள் பலவற்றில் களம் கண்டுள்ளேன். அப்போது தான் எனக்கு காளையை வளர்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன் தொடர்ச்சியாக ஒரு காளையை வாங்கினேன். சண்டிவீரன். என்று பெயரிட்டு அதனை வளர்த்து வருகிறேன்.

  சண்டிவீரன் காளை

  இதன் கருமை நிறம் மற்றும் தோற்றமே காண்போரை கலங்க வைக்கும். சண்டிவீரன் 7 முறை வாடிவாசல் கண்டுள்ளான். அவன் பங்கேற்ற போட்டிகளில் இதுவரை பிடிமாடாக ஆனது இல்லை. இந்த ஆண்டும் இவனை தயார்படுத்தி வருகிறேன்.” என்றார் உற்சாகத்துடன்.

  Also Read:  "மழைதான் எங்க குலசாமி"- பருவ மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கிய விராலிமலை விவசாயிகள்

  காளைகளுக்கு சத்தான உணவு மிகவும் அவசியம் அதற்கே அதிக அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. அதேபோல் நீச்சல், நடைபயிற்சி மற்றும் மண் மேடு அமைத்து அதனை முட்டியும் பயிற்சிகளும் வழங்கப்படும் என்று கூறுகின்றனர் காளை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கிராமத்து மக்கள்.

  சென்ற ஆண்டு விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1353 காளைகள் பங்கேற்றன. அதிக எண்ணிக்கையில் காளைகள் பங்கேற்றதால் கின்னஸ் புத்தகத்தில் அந்த ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் -  சினேகா ( புதுக்கோட்டை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Jallikattu, Local News, Pudukkottai