முகப்பு /புதுக்கோட்டை /

வீணாப் போகும் வேளாண்மை கழிவுகளிலிருந்து உரம்- லாபம் ஈட்டும் புதுக்கோட்டைப் பெண்

வீணாப் போகும் வேளாண்மை கழிவுகளிலிருந்து உரம்- லாபம் ஈட்டும் புதுக்கோட்டைப் பெண்

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெண்

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் வீணாப் போகும் வேளாண்மை கழிவிலிருந்து இருந்து மண்புழு உரம் தயாரித்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டையில் 10 வருடங்களாக இந்த மண்புழு உரத் தயாரிப்பில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சாந்தி ஈடுபட்டுவருகிறார். இதுகுறித்து பேசிய அவர், ‘மண்புழு உரத் தயாரிப்பில் 75 நாட்களுக்கு ஒரு முறை 5,000 ரூபாய் எங்களுக்கு வருவாய் கிடைக்கிறது. அதுவும் வீணாப் போகும் வேளாண்மை கழிவு, காய்கறி கழிவு, மாட்டு சாணம் இவற்றை சாதாரண குப்பைக் கழிவுகளாக விற்றால் 1,000 ரூபாய்க்கு போகும். அதையே மண்புழு உரமாக மாற்றி விற்றால் 5,000 ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும்.

எந்த ஒரு முதலீடும் இல்லாமல் ஒரு மாட்டின் சாணத்திலிருந்து 5,000 ரூபாய் என்றால் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நமக்கு வரும் லாபமும் அதிகமாக இருக்கும். இந்த மண்புழு உரத் தயாரிப்பு குறித்த பயிற்சியை மகளிர் திட்டம் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் நாங்கள் பெற்றுக் கொண்டோம். அடுத்தபடியாக இதனை பெரிய அளவிற்கு எடுத்துச் செல்லவும் உள்ளோம்’ என்றும் தெரிவித்தார்.

மேலும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து பேசிய சாந்தி, ‘வேளாண்மை கழிவுகள், மாட்டு சாணம் ஆகியவற்றை நன்கு மக்கும் வரை காலை மற்றும் மாலை வேலைகளில் தண்ணீர் விட்டு, அது மக்கிய பின் தரையில் தேங்காய் மட்டையை பரப்பி அதன் மேல் இந்த குப்பையை மாற்றவேண்டும். பின்னர், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். அதன் பின் அதில் மண் புழுக்களை விட வேண்டும்.

பின்னர் இதனை எடுத்து சலித்து வியாபாரத்திற்கும் உரத்திற்கும் பயன்படுத்தலாம். அதிக அளவில் நேரமோ உழைப்போ இதற்கு செலவிட தேவையில்லை. பெரிய அளவில் பண்ணும் போது அதிக அளவில் லாபம் பார்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் கேக் சாப்பிட்ட இளைஞர்களுக்கு வாந்தி, மயக்கம் - இருவர் மருத்துவமனையில் அனுமதி

மேலும் இந்த மண்புழு உரத்தால் வளரும் காய்கறிகள், பூக்கள், செடிகளுக்கும் செயற்கை முறை மருந்து தெளித்து வளரும் செடிகளுக்கும் அதிக அளவில் வித்தியாசங்களை நாங்கள் கண்டுள்ளோம். எனவே இதனை அதிகமாக தயாரித்து மக்களிடையே மண்புழு உரம் குறித்த விழிப்புணர்வை எடுத்து செல்கின்றோம்” என்றும் தெரிவித்தார் சாந்தி.

First published:

Tags: Local News, Pudukkottai