ஹோம் /புதுக்கோட்டை /

"மழைதான் எங்க குலசாமி"- பருவ மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கிய விராலிமலை விவசாயிகள்

"மழைதான் எங்க குலசாமி"- பருவ மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கிய விராலிமலை விவசாயிகள்

"மழையே எங்கள் குலசாமி" 

"மழையே எங்கள் குலசாமி" 

Pudukkottai District News: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் விவசாய பணிகளில் முழுவீச்சில் ஈடுபடும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viralimalai, India

  புதுக்கோட்டை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட மாவட்டங்களில் ஒன்று. சுமார் 95,731 ஹெக்டர் நிலப்பரப்பில் இங்கு விவசாயம் செய்யப்படுகிறது. நீர் பாசனத்திற்கு வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயிகள் உள்ளனர்.

  பருவமழை தற்போது தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள், விவசாய பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். கடலை, மிளகாய், சோளம், எள்ளு, தென்னை போன்ற பிற பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படும் போதும் நெல் மட்டுமே பிரதான பயிராக உள்ளது.

  இந்தப்பகுதியில் 30 வருடங்களாக விவசாயம் செய்துவரும் விவசாயி சிதம்பரம் கூறுகையில் “பருவமழையை நம்பி தான் இங்கு விவசாயம் செய்வோம். மழையே எங்கள் குலசாமி . சில நேரம் கை கொடுக்கும் சில நேரம் நட்டமும் வரும். இருந்தாலும் சோர்வடையாமல் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடன் வாங்கி தான் நடவு செய்தேன். மழை வரும் பூமி செழிக்கும் என்ற நம்பிக்கைதான்” என்று தன்னுடைய பேச்சில் நம்பிக்கையுடன் மீண்டும் விவசாய பணிகளில் மீண்டும் தொடர்ந்தார்.

  இதையும் படிங்க :  இவ்வளவு வெயிட்டா? வலையை சுத்தம் செய்த மீனவர்.. கையில் சிக்கிய வெடிபொருள்!

  இங்கு வசிக்கும் பறவைகள் விவசாயிகளுக்கு மற்றொரு சவாலாக அமைந்துள்ளது . கதிர் அறுவடைக்கு தயாராக வரும் நேரத்தில் மயில் போன்ற பறவைகள் இனங்கள் நிலங்களுக்குள் புகுந்து பயிரை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அவற்றிடம் இருந்து பயிரை காக்க அதிகமாக ஒலி எழுப்பும் பொருட்களை வேலியில் கட்டிவிட்டு ஓலி எழுப்பி அதன்மூலம் பறவைகளை விரட்டி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

  செய்தியாளர்: சினேகா(புதுக்கோட்டை)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Farmers, Local News, Pudukkottai