ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் இப்படி எல்லாம் வண்ணமயமான கொலு பொம்மைகள் இருக்கா?

புதுக்கோட்டையில் இப்படி எல்லாம் வண்ணமயமான கொலு பொம்மைகள் இருக்கா?

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai Variety Of Colorful Kolu Dolls Available | புதுக்கோட்டை  மாவட்டத்தில், நவராத்திரியை யொட்டி தற்போது கொலு  பொம்மைகள் வண்ணமாக ஜொலித்து வருகிறது. கடைகளில் ஆக்கிரமிப்பட்டு இருந்த கொலு பொம்மைகள் தற்போது, வீடுகளில் அலங்கரித்து வருகிறது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில், நவராத்திரியையொட்டி தற்போது கொலு பொம்மைகள் வண்ணமாக ஜொலித்து வருகிறது. கடைகளில் ஆக்கிரமிப்பட்டு இருந்த கொலு பொம்மைகள் தற்போது, வீடுகளை அலங்கரித்து வருகிறது.

இதுகுறித்து பார்க்கலாம் வாங்க,

நவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டையில் கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா வரும் 26ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க ; புள்ளிங்கோ ஸ்டைலில்  சிகை அலங்காரம் - புதுக்கோட்டையில் சலூன் கடைகளுக்கு நோட்டீஸ் 

நவராத்திரி விழாவையொட்டி இந்துக்கள் தங்கள் வீட்டில் 9 நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்கள் புதுக்கோட்டையில் களைகட்ட தொடங்கி உள்ளது. விழாவையொட்டி புதுக்கோட்டை சாந்தநாத அம்மன் சன்னதி அருகிலுள்ள பூஜை பொருட்கள் கடைகளில் பல வண்ண வடிவில் சிறியது முதல் பெரியது வரை கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

இதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சக்கரத்தாழ்வார், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி, முருகன், சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் பொம்மைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்காக உள்ளன.

இதேபோல் திருவள்ளுவர், அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி விவேகானந்தர் போன்ற தலைவர்களின் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பொம்மைகள் அனைத்தும் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukottai