Home /pudukkottai /

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Iluppur, India
    புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சிப்காட், அண்ணா பண்ணை துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) 6ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சிப்காட், அண்ணா பண்ணை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுக்கோட்டை சிப்காட், அண்ணா பண்ணை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர், இலுப்பூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து ஆகியோர் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை(ரெங்கம்மாள் சத்திரம்), கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி, கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையாண்டிப்பட்டி, இரும்ளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், சேம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், ராம் நகர், மச்சுவாடி, ஜீவா நகர் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை

    வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி