முகப்பு /புதுக்கோட்டை /

வரலாற்றுச் சிறப்புமிக்க கொடும்பாளூர் ராணி மங்கம்மாள் சத்திரத்துக்கு இப்படி ஒரு நிலையா?... கவலையில் புதுக்கோட்டை மக்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கொடும்பாளூர் ராணி மங்கம்மாள் சத்திரத்துக்கு இப்படி ஒரு நிலையா?... கவலையில் புதுக்கோட்டை மக்கள்

X
ராணி

ராணி மங்கம்மாள் சத்திரம் சேதம்

ranimangammal chathiram | புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்த கட்டிடம் ஆனது பதநீர், முட்டையின் வெள்ளைக்கரு உள்ளட்டவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viralimalai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் சத்திரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ராணி மங்கம்மாள் சத்திரம் உள்ளது. இந்த சத்திரம் தற்போது சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் அதனை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கொடும்பாளூர் சத்திரத்தில் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமை வாய்ந்த ராணி மங்கம்மாள் சத்திரம் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொடுப்பாளுரை ஆண்ட குறுநில மன்னரான இரும்பு வேல் விக்ரமகேசரி என்ற மன்னர் காலத்தில் ராணி மங்கம்மாவால் கட்டப்பட்ட இந்த சத்திரத்தின் உள்ளே உள்ள தூண்கள் நம்மை பிரமிக்கும் வகையில் அரண்மனை போன்ற பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் ஆனது பதநீர், முட்டையின் வெள்ளைக்கரு உள்ளட்டவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் கொடும்பாளூர் சத்திரம் வழியாக நெடுந்தூரம் பயணம் செய்பவர்களுக்காக இந்த சத்திரத்தில் தங்கி உணவருந்தி விட்டு செல்வதற்காக ராணி மங்கம்மாவால் இந்த சத்திரம் கட்டப்பட்டது. இந்த ராணி மங்கம்மாள் சத்திரத்தால் இந்த ஊருக்கு கொடும்பாளூர் சத்திரம் என்ற பெயரும் வந்தது.

காலப்போக்கில் இந்த சத்திரம் பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது அதன் பின்னர் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மேற்பகுதிகளில் மரங்கள் முளைத்து எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலை ஏற்பட்டதால் இந்த சத்திரமானது பூட்டியே கிடக்கிறது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த சத்திரத்தை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய கொடும்பாளூர் சத்திரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கூறுகையில் இந்த சத்திரத்தின் உள்பகுதியானது பெரிய பெரிய தூண்களுடன் அரண்மனை போன்ற கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது சத்திரத்தின் உள்புறம் மற்றும் வெளிப்புறச் சுவர்கள் சேதம் அடைந்து உள்ளன எனவே இதனை புதுப்பித்து அருங்காட்சியமாகவோ நூலகமாகவோ மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pudukkottai