முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் கோடைகால சிலம்பம் பயிற்சி.. சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்!

புதுக்கோட்டையில் கோடைகால சிலம்பம் பயிற்சி.. சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்!

X
சிலம்பம்

சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்

Pudukkottai silambam | புதுக்கோட்டையில் நடைபெற்ற கோடைக்கால சிலம்பம் பயிற்சி முகாமின் நிறைவு நாளை முன்னிட்டு மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையில் சிலம்பம் சுற்றி அசத்திய காட்சி காண்போரை கவர்ந்தது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட நகர் பகுதியில் கோடை காலத்தில் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாகவும் , ஆரோக்கியமான தற்காப்பு கலைகளை கற்பிக்கும் நோக்கோடு புதுக்கோட்டை புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் கோடைகால சிலம்பம் பயிற்சி வகுப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அதனை ஆர்வமுடன் கற்ற நிலையில் அதன் நிறைவு விழாவும் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவின் போது மாணவ மாணவிகள் பாரம்பரிய உடையில் சிலம்பம் சுற்றி அசத்திய நிகழ்வு அங்கிருந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நகர்மன்ற தலைவி திலகவதி செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தற்காப்பு கலையை பயின்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Pudukkottai