முகப்பு /புதுக்கோட்டை /

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு புதுக்கோட்டை பள்ளி மாணவர்கள் அஞ்சலி

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு புதுக்கோட்டை பள்ளி மாணவர்கள் அஞ்சலி

X
அஞ்சலி

அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

Pudukkottai Today News : புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தனியார் பள்ளி மாணவர்கள் துருக்கி, சிரியா நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

துருக்கி, சிரியாவில் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அதிர்ந்து இடிந்து விழுந்தன. இதில் சிறுவர், பெண்கள், ஆண்கள் என பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.  தொடக்கத்தில் குறைவாக கணிக்கப்பட்ட பலி எண்ணிக்கை தற்போது சிறிது சிறிதாக உயர்ந்து 21,000 கடந்துள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த பல்லாயிரக்கணவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விராலிமலை தனியார் பள்ளி மாணவர்கள் வகுப்புகள் தொடங்கும் முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் பேனர் முன்னாள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து கண்களை மூடி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

First published:

Tags: Local News, Pudukkottai