Home /pudukkottai /

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்; சரிசெய்ய ரூ.15,000 கேட்கும் மின்வாரிய ஊழியர்கள்- விவசாயிகள் வேதனை

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்; சரிசெய்ய ரூ.15,000 கேட்கும் மின்வாரிய ஊழியர்கள்- விவசாயிகள் வேதனை

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கல்லம்பட்டி ஊராட்சியில் உள்ள மூக்கழகன்பட்டியில் சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமாக கத்தரி, வெண்டை,தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த விவசாய பகுதியில் ஒரு மின்கம்பமானது சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே ?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ponnamaravathi, India
    பொன்னமராவதி அருகே மிகத்தாழ்வாக நாலடி உயரத்தில் மின்கம்பி செல்வதால் விவசாயம் செய்ய விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மின்கம்பத்தை மாற்றி தர மின்வாரிய ஊழியர்கள் 15,000 ரூபாய் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கல்லம்பட்டி ஊராட்சியில் உள்ள மூக்கழகன்பட்டியில் சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமாக கத்தரி, வெண்டை,தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் குடும்பத்தினருடன் தினசரி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விவசாய பகுதியில் ஒரு மின்கம்பமானது சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி எலும்பு கூடாக பரிதாபமாக காட்சியளிக்கிறது.

    தாழ்வாக செல்லும் மின்கம்பி


    மேலும் இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக 4 அடி உயரத்தில் செல்கிறது. குறிப்பாக விவசாயிகள் விவசாயம் செய்யும் விளை நிலங்களின் வழியே இம்மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் விவசாயிகள் இப்பகுதியில் விவசாயம் செய்ய மிகவும் அச்சப்படுகின்றனர்.

    மோசமான நிலையில் மின்கம்பி


    இந்த மின்கம்பத்தையும், தாழ்வாக செல்லும் மின்கம்பியையும் மாற்றி தர பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மின்வாரியத்தினர் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அத்தோடு விவசாயிகள் மின்கம்பத்தை மாற்றி தர கோரிக்கை வைத்த பொழுது 15,000 ரூபாய் வரை செலவாகும் என்று மின்வாரியத்தினர் தெரிவித்ததாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    அத்தகைய தொகையை தங்களால் கட்ட இயலாது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மின் கம்பத்தையும், மிகவும் தாழ்வாக செல்லும், மின்கம்பியையும் மாற்றி தர வேண்டும் என கல்லம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: துர்கா மகேஷ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி