புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மாட்டு பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதத்தின் அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவுத்தொழிலுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இதில் மக்கள் அனைவரும் தங்கள் கால்நடைகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் பொட்டு, கால்நடைகளுக்கு மலர் மாலைகள் அணிவித்து அலங்கரிக்கப்பர்.
அதன் பின் மாலையில் கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு அதன் பின் தங்களது கால்நடைகள்எந்த நோய்யும்இல்லாமல் நலமுடன் இருக்க தீச்சட்டியை திருஷ்டி சுத்தி முச்சந்தியில் எடுத்து சென்று போட்டனர். குழந்தைகளுக்கு திருஷ்டி கழித்தல் போல் கால்நடைகளையும் குடும்ப உறுப்பினர்களாக பாவித்து அதன் ஆரோக்கியத்திற்கான பிராத்தனை மற்றும் திருஷ்டி கழித்தல் ஆகியநிகழ்வுகளுடன் கிராமத்தில் உள்ள மக்கள் மாட்டு பொங்கலை கொண்டாடினர்.
செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal 2023, Pongal festival, Pudukkottai