முகப்பு /புதுக்கோட்டை /

”கருப்பு கவுனி ரகத்தில் லாபம் ஈட்டுவது எப்படி? - விளக்கும் புதுக்கோட்டை இயற்கை விவசாயி

”கருப்பு கவுனி ரகத்தில் லாபம் ஈட்டுவது எப்படி? - விளக்கும் புதுக்கோட்டை இயற்கை விவசாயி

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை விவசாயி

Pudukkottai | கருப்பு கவுனி ரக சாகுபடி குறித்து புதுக்கோட்டை இயற்கை விவசாயி விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் அவரது 5 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே தொடர்ந்து பயிரிட்டு வருகிறார். அதில் தற்போது கருப்பு கவுனி அரிசி சாகுபடி செய்து வருகிறார்.

கருப்பு கவுனி அறுவடையில் ஈடுபட்டு வரும் சுரேஷ் அதன் மூலம் வரும் லாபம் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்து விவரித்தார். இதுகுறித்து பேசிய அவர், ‘கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, வாசனை சீரக சம்பா, கிச்சடி சம்பா என 10 க்கும் மேற்பட்ட வகையான பாரம்பரிய நெல் ரகங்களை என்னுடைய 5 ஏக்கர் நிலத்தில் முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். அதில் ஒரு வகையாக கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்து வருகிறேன். இந்த கருப்பு கவுனி விவசாயத்திற்கு 75,000 ரூபாய் வரை செலவு ஆனது.

சாகுபடி செய்யப்பட்ட நெல்லை விற்றால் ரூ 1 லட்சம் வரையில் கிடைக்கும். இந்த நெல்லை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்தால் அதன் மூலம் லாபம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

தற்போது இந்த கருப்பு கவுனி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய மற்ற விவசாயிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இதனை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்று தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர்.

10 ஆண்டுக்கு பின் விராலிமலையில் நடந்த மீன்பிடித் திருவிழா- மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

அரசு இயற்கை விவசாய பாரம்பரிய நெல் ரகங்களை நேரடியாக கொள்முதல் செய்தால் இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி மேலும் அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவர்” என்றும் தெரிவித்தார் சுரேஷ்.

First published:

Tags: Local News, Pudukkottai