Home /pudukkottai /

தாயின் நினைவாக இருந்த தங்க செயினை கண்டுபிடிக்க பேனர் வைத்த இளைஞர்- புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி

தாயின் நினைவாக இருந்த தங்க செயினை கண்டுபிடிக்க பேனர் வைத்த இளைஞர்- புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி

சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்

சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் தொலைத்த தங்க நகையைக் கண்டுபிடிப்பதற்காக பேனர் வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ponnamaravathi, India
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாராயணன். இவரின் தாயார் கருப்பாயி அம்மாள். உடல் நலக் குறைவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார்.

    இவரது நினைவாக விவசாயி நாராயணன் தங்கத்தால் ஆன கைச்செயின் ஒன்றை அணிந்திருப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்திருக்கிறார். கடந்த திங்கட்கிழமை உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டு வளைகாப்பு விழாவிற்கு சென்று வேகுபட்டி, கொப்பனாபட்டி, காட்டுப்பட்டி, பொன்னமராவதி வழியாக தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது கைச்செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் வழி நெடுகிலும் தேடி உள்ளார்.

    பேனர் வைத்துள்ள நாராயணன்


    இருப்பினும் தனது தாயின் நினைவாக வைத்திருந்த கைச்செயின் கிடைக்கவில்லை. அதனால், மனம் வேதனை அடைந்த அவர், சென்று வந்த ஊர்களில் பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டு வைத்து தொலைந்த அவரது கைச்செயினை தேடி வருகிறார்.

    சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்


    அதில் குறிப்பிட்டுள்ளதாவது அன்பு வேண்டுகோள் எனவும், தனது தாய் தொட்டிச்சி அம்மன் சாமியாடி எனவும் அவரது நினைவாக நான் கை செயின் அணிந்திருந்தேன் எனவும் திருப்பிக் கொடுப்பவர்களுக்கு மன நிறைவான பரிசு வழங்கப்படும் எனவும் வேகுபட்டி, கொப்பனாபட்டி ,காட்டுப்பட்டி, பொன்னமராவதி ஆகிய ஊர்களில் பிளக்ஸ் போர்டு வைத்து நூதன முறையில் தொலைத்த தங்க செயினை தேடி வருகிறார். இதனை பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

    தாயின் நினைவாக இருந்த செயினை தொலைத்த நிலையில், பல்வேறு ஊர்களிலும் அதனை தேடி கட்டவுட் வைத்துள்ள மகனை பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி செல்கின்றனர்.

    செய்தியாளர்: துர்கா மகேஷ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி