Home /pudukkottai /

சென்னைக்கு தி. நகர்; புதுக்கோட்டைக்கு கீழ ராஜ வீதி - வணிகத்தில் கலக்கும் இந்தப் பகுதியின் வரலாறு தெரியுமா?

சென்னைக்கு தி. நகர்; புதுக்கோட்டைக்கு கீழ ராஜ வீதி - வணிகத்தில் கலக்கும் இந்தப் பகுதியின் வரலாறு தெரியுமா?

கீழ ராஜ வீதி

கீழ ராஜ வீதி

புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள கீழ ராஜ வீதி அந்தப் பகுதியின் முக்கிய வணிக வீதியாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை நகரின் பிரதானமான வணிகப் பகுதியாக விளங்கி வருகிறது கீழ ராஜ வீதி.

கீழ ராஜ வீதி என்பதற்கான பெயர் காரணம் புதுக்கோட்டை நகரின் தொன்மையோடு ஒன்றிப் போன ஒன்றாகும். புதுக்கோட்டை என்ற பெயருக்குக் காரணமான தொண்டைமான் மன்னர்களின் புதிய கோட்டை நிர்மானிக்கப்படுவதற்கு முன்பாக பழைய அரண்மனை இருந்த இடத்தைச் சுற்றி இருந்த பிரதான வீதிகளில் தொண்டைமான் மன்னர்கள் வீதி உலா வருவது வழக்கமாக இருந்துள்ளது.

அதன் அடிப்படையில் மேற்கில் இருந்த வீதி மேல ராஜ வீதி எனவும், வடக்கில் இருந்த வீதி வடக்கு ராஜ வீதி எனவும், தெற்கில் இருந்த வீதி தெற்கு ராஜ வீதி எனவும், கிழக்கில் இருந்த வீதி கீழ ராஜ வீதி எனவும் பெயர் பெற்றிருக்கிறது.



புதிய அரண்மனையை ராஜகோபால தொண்டைமான் நிர்மாணித்த பிறகு இந்த வீதிகளில் வணிகப் பயன்பாடுகளுக்காக கடைகள் பெருகி உள்ளன. புதுக்கோட்டையின் முக்கிய வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் பிரதான கடைகள் இந்த நான்கு வீதிகளில் தான் அதிகமாக இருந்து வருகின்றன.

கீழ ராஜ வீதி


அதிலும் குறிப்பாக கீழ ராஜ வீதி சென்னைக்கு ஒரு தி.நகரைப் போல புதுக்கோட்டைக்கு ஒரு தி. நகர் எனக் கூறுமளவிற்கு பிரதானமான வணிகப் பகுதியாக இருந்து வருகிறது. சென்னை தியாகராய நகரில் ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதும் என்றால், புதுக்கோட்டையின் கீழ ராஜ வீதியில் ஞாயிறைத் தவிர்த்து மற்ற தினங்களில் கூட்டம் அலைமோதும்.

கீழ ராஜ வீதி


கீழ ராஜ வீதிக்குப் போனா எந்தப் பொருளா இருந்தாலும் தரமாவும், மலிவாவும் வாங்கிடலாம் என்பது புதுக்கோட்டை மாவட்ட மக்களின் மனநிலையாகும். இந்த கீழ ராஜவீதியில் வாகனங்களை நிறுத்த இடப் பற்றாக்குறை இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து விடுகிறது.

கீழ ராஜ வீதி


போக்குவரத்துக் காவல்துறையினரின் கடும் கண்காணிப்பிற்கு இடையிலும் அதீத கூட்டத்தை சிறிய வீதிக்குள் கட்டுப்படுத்த முடியாத சூழலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.
உரிய வாகன நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்து அங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளுக்குள் மக்கள் செல்ல வழிவகை செய்தால் அனைத்து போக்குவரத்து நெரிசலையும் சரி செய்து விடலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

உரிய போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, வாகனங்களை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு கீழ ராஜ வீதிக்குள் நுழைந்தால் எவருக்கும் நெருக்கடி இல்லாத ஒரு இன்பமயமான ஷாப்பிங்கை முடித்து விட்டு திருப்தியோடு வீடு திரும்பலாம்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி