முகப்பு /புதுக்கோட்டை /

கரூர் கிராமத்திற்கு புதிய காவல் நிலையம் வேண்டும்.. புதுக்கோட்டை மக்கள் கோரிக்கை!

கரூர் கிராமத்திற்கு புதிய காவல் நிலையம் வேண்டும்.. புதுக்கோட்டை மக்கள் கோரிக்கை!

X
பாழடைந்த

பாழடைந்த காவல் நிலையம்

Pudukkottai public request | புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கரூர் கிராமத்தில் பாழடைந்த நிலையில் காவல்நிலையம் உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகாவில் உள்ள கரூர் கிராமத்தில் காவல் நிலையம் ஒன்று இருக்கிறது. இந்த காவல் நிலைய கட்டிடம் சேதமடைந்து, கட்டுமானம் இடிந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. அதன் அருகில் கால்நடை மருத்துவமனையும் இருக்கிறது. எதிர் முனையில் அரசினர் மாணவர் விடுதி உள்ளது.

இந்நிலையில், அந்த கட்டிடத்திற்கு அருகே, சிறுவர்களும், பள்ளி மாணவர்களும் அவ்வப்போது விளையாடுகின்றனர். அங்கே சென்று விளையாடக் கூடாது என்று பெற்றோர்கள் அறிவுரை வழங்கியபோதும், சிறுவர்கள் அவ்வப்போது அங்கே சென்று விளையாடுவதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு சிறுவர்கள் அங்கே விளையாடும்போது, அந்த காவல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தால், சிறுவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடிந்துவிடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க | நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோயிலின் புதிய வைர தேர் வெள்ளோட்டம்!

எனவே, அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை அந்த இடத்திலேயே கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டிடம் சோமடைந்திருப்பதால், காவல்நிலையம், அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த சமுதாயக்கூடாதல், குற்றவாளிகளை அடைந்து வைப்பதற்கு போதிய வசதி இல்லை என்று சொல்லப்படுகிறது.

எனவே, இடிந்துவிழும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கரூர் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Police station, Pudukkottai