Home /pudukkottai /

புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்- மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு

புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்- மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு

விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள்

விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள்

புதுக்கோட்டையில் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குடி குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளன.

    இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி, பூப்பந்து, இறகுப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு குழு விளையாட்டுப் போட்டிகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு வீசுதல், 100மீ ஓட்டம், 500 மீ ஓட்டம், 1,000மீ ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

    இந்த போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்று வரும் நிலையில் உட்பிரிவுகளாக 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன.

    நேற்று முதல் மாணவர்களுக்கான குழு போட்டிகளான கையுந்துப் பந்துப் போட்டிகளும், பூப்பந்து போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. ஆலங்குடி குறுவட்ட அளவில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து அணிகள் வருகை தந்துள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் விளையாடி வெற்றி பெற்று வருகின்றனர்.

    இது குறித்துப் பேசிய கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முத்துக்குமார், பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, முதலுதவி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி