Home /pudukkottai /

Pudukkottai | தரமான சாலை வசதி வேண்டும்- வடகாடு, கொத்தமங்கலம் மக்களின் 5 ஆண்டு கோரிக்கை

Pudukkottai | தரமான சாலை வசதி வேண்டும்- வடகாடு, கொத்தமங்கலம் மக்களின் 5 ஆண்டு கோரிக்கை

சேதமடைந்த நிலையில் சாலை

சேதமடைந்த நிலையில் சாலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம் மற்றும் வடகாடு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த தரமான சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் கொத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள்தொகை மற்றும் பரப்பளவில் மிகப்பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக இருந்து வருகின்றன.

இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையில் திருமணத்துக்கு பெண் கொடுத்து, பெண் எடுக்கும் பழக்கம் அதிகமாக இருந்துவருகிறது.

இந்த சூழலில் கொத்தமங்கலத்தில் இருந்து பட்டுக்கோட்டை, ஆவணம் கைகாட்டி உள்ளிட்ட பிரதான பகுதிகளுக்கு செல்வதற்கு வடகாடு சென்று அங்கிருந்து புதுக்கோட்டை- பேராவூரணி நெடுஞ்சாலையில் பட்டுக்கோட்டை மற்றும் ஆவணம்- கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய சூழல் உள்ளது.

இந்த சூழலில் வடகாடு கொத்தமங்கலம் சாலை ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்படும் போதும் புதுப்பிக்கப்பட்ட ஒரே ஆண்டிற்குள் குண்டும் குழியுமாக மிகவும் சேதம் அடைந்து இருப்பது தொடர்ந்து வருகிறது.

சேதமடைந்த நிலையில் சாலை


இந்த அவலநிலை தொடர்வதோடு மட்டுமில்லாமல் இந்த சாலை போடப்பட்டு அடுத்த முறை புது சாலைகள் அமைப்பதற்கு 5 முதல் 7 வருடங்கள் ஆகின்றன. அதுவரை இந்த சாலைகள் குண்டும் குழியுமாக தான் இருந்து வருகின்றன. வடகாடு- கொத்தமங்கலம் சாலை ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்படும் போதும் ஓராண்டிற்குள்ளாகவே மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விடுவதாகவும் மீண்டும் இந்த சாலையை புதுப்பிக்க ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் ஆவதாகவும் எனவே ஒருமுறை புதுப்பிக்கப்படும் சாலை நீண்ட நாள் உழைக்கும் வகையில் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து தர வடகாடு மற்றும் கொத்தமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேதமடைந்த நிலையில் சாலை


மேலும் அறந்தாங்கியிலிருந்து கொத்தமங்கலம் வழியாக வடகாடு வந்து செல்லும் 17-ம் எண் அரசுப் பேருந்தும் இந்த வழியாகத்தான் இயங்கி வருகிறது. இந்த சாலையின் நிலை மிகவும் மோசமாகும் போது இந்த பேருந்து அடிக்கடி கொத்தமங்கலத்தோடு திரும்பி சென்று விடுகிறது. இந்த பேருந்து தடையின்றி இயங்கவும், போதுமான அளவிற்கு மேலும் பேருந்துகளை இயக்கவும் இந்த சாலையை அகலப்படுத்தி, தரமான சாலையாக பல ஆண்டுகள் சேதமடையாமல் இருக்கும் வகையில் சாலையை அமைத்துத் தரவேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், நூற்றுக்கணக்கான 4 சக்கர வாகனங்களும் இயங்கும் சாலையாக இருப்பதால், குண்டும் குழியுமான சாலையில் பயணித்து பல முறை விபத்துகள் ஏற்பட்டு கை, கால் முறிவு ஏற்பட்டு இளைஞர்கள் பலர் அவதி அடைந்துள்ளனர். இந்த சாலைகளால் உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் அவதியை குறைக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்பாக உள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி