முகப்பு /புதுக்கோட்டை /

சூரியகாந்தி மலர் சாகுபடியில் 3 மாதத்திலேயே செம்ம லாபம் பார்க்கலாம்.. புதுக்கோட்டை விவசாயி சொன்ன சூப்பர் யோசனை..

சூரியகாந்தி மலர் சாகுபடியில் 3 மாதத்திலேயே செம்ம லாபம் பார்க்கலாம்.. புதுக்கோட்டை விவசாயி சொன்ன சூப்பர் யோசனை..

X
சூரியகாந்தி

சூரியகாந்தி மலர் சாகுபடி

Sunflowers cultivation : புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி சூரிய காந்தி மலர் விவசாயம் மூலம் லாபம் ஈட்டிவருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் தேன்கனியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் சூரியகாந்தி பூ உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூரியகாந்தி பூ விவசாயம் செய்ய எந்த விதமான மருந்துகளும் தேவை இல்லை. எளிமையான முறையில் இந்த விவசாயத்தை செய்யலாம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையிலும் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் தரும் சூரிய காந்தி சாகுபடிக்கு ஏற்ற மண் என்றால் அது கரிசல் பூமி தான் எனினும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மண் வகையிலும் எல்லா மாவட்டங்களிலும் சூரியகாந்தி சாகுபடி செய்யலாம்.

அதாவது 3 முறை உழவு செய்து அதன்பின் விதைக்கு ஏற்ப பாத்திகள் அமைத்து, விதை நட்டு தண்ணீர் விட வேண்டும். மேலும் உரமும் இட வேண்டும். பின்னர் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். இந்த சூரியகாந்தி பூ நடவு செய்த 95 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இதுகுறித்து விவசாயி சின்னப்பா பேசியபோது, “பல வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். அதேபோல் இந்த வருடமும் சூரியகாந்தி பூ விவசாயம் செய்து வருகிறேன். பூக்கள் தற்போது அறுவடைக்கு தயாராகிவிட்டது. இதில் 2000லிருந்து 3000 வரை செலவு செய்துள்ளேன்.

வேறு எந்த உரமோ அல்லது பூச்சி மருந்துகளோ போட்டது இல்லை. இதற்கு செலவுகளும் இல்லை. ஒரு கிலோ சூரிய காந்தி விதையின் விலை 120 ரூபாய் வரை போகிறது. வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் விட்டால்போதும். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த சூரியகாந்தி பூ விவசாயத்தில் ஈடுபடலாம். இதில் கிளிகள், குருவிகள் போன்ற பறவைகளின் தொல்லைகள் மட்டுமே உள்ளது. இந்த சூரியகாந்தி பூ விவசாயத்திற்கு அரசின் சார்பில் விதைகள் மானிய விலையில் வழங்கப்பட வேண்டும்.

மேலும் வறட்சியை தாண்டி வளரக்கூடிய சூரியகாந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

இந்த சூரியகாந்தி மலர் சாகுபடியில் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு ஏக்கரில் 50,000 ரூபாய் லாபம் எடுக்கலாம். பட்டம் என்பதே இல்லாமல் ஆண்டு முழுவதும் இந்த சூரியகாந்தி மலர் சாகுபடியில் ஈடுபடலாம். இந்த சூரியகாந்தி விதையை ஆலையில், மண்டி கடை, மார்க்கெட் என பல இடங்களில் சந்தைப்படுத்தலாம். எண்ணெய் ஆலையில் விற்றால் நல்ல விலைக்கு விற்பனையாகும். பக்குவப்படுத்தி உலர்த்தி வைத்து மூட்டை கட்டி வைத்து மார்க்கெட்டில் விலை அதிகமாக இருக்கும்போதும் விற்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Agriculture, Local News, Pudukkottai