Home /pudukkottai /

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Aranthangi, India
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியாநிலை, நாகுடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக் கிழமை) 3ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியாநிலை, நாகுடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறந்தாங்கி, அழியாநிலை, நாகுடி ஆகிய மின்நிலையதுக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்நிலையத்தினர் சார்பில், தெரிவித்துள்ளனர்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    அறந்தாங்கி நகர் பகுதி, அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி குரும்பூர், மறமடக்கி, ரெத்தினகோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், நாகுடி, அத்தானி, தொண்டைமாநேந்தல், மேல்மங்களம், பெருங்காடு, திணையாகுடி, மேலப்பட்டு, கட்டுமாவடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி