ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

புதுக்கோட்டையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

மின் தடை

மின் தடை

Pudukkottai News: புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல், ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை ( 25-11-22)  மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதையடுத்து, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவல் மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின் தடை ஏற்படும் இடங்கள்:

    கறம்பக்குடி நகர், தீத்தான் விடுதி குழந்திரான்பட்டு, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன் கோன்பட்டி, பந்துவக்கோட்டை, மருதன்கோன்விடுதி, ரெகுநாதபுரம், கிளாங்காடு கீராத்தூர், காடாம்பட்டி, செங்கமேடு, பல்லவராயன்பத்தை, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டத்திகாடு, கருக்காகுறிச்சி, குரும்பிவயல், நெடுவாசல், திருமுருகபட்டினம், நெய்வேலி, திருவோணம், ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி, சோத்துப்பாலை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன் பட்டி, மங்கலத்துப்பட்டி கந்தர்வகோட்டை, அக்கட்சி பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசு பட்டி, மெப்குடி ய்பட்டி, ஆத்தியடி பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம் பட்டி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Local News, Powercut, Pudukkottai, Tamil News