Home /pudukkottai /

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புதுக்கோட்டையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Annavasal, India
    புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், அன்னவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) 13 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், அன்னவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாத்தூர் துணை மின் நிலையத்தில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை மாத்தூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: மாத்தூர் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி

    இதேபோல், அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து தெரிவித்துள்ளார்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல், அன்னவாசல் பேருராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி