Home /pudukkottai /

குடியிருப்புகளின் அருகே குளம் போல் தேங்கிய கழிவுநீர்: பரவும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் அபாயத்தில் மக்கள்

குடியிருப்புகளின் அருகே குளம் போல் தேங்கிய கழிவுநீர்: பரவும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் அபாயத்தில் மக்கள்

தேங்கியிருக்கும் சாக்கடை நீர்

தேங்கியிருக்கும் சாக்கடை நீர்

கறம்பக்குடி பேரூராட்சியில் சாக்கடை போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karambakkudi, India
    புதுக்கோட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் கழிவு நீர் குளம் போல தேங்கி இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, பல வித நோய்களும் ஏற்படுவதாக கறம்பக்குடி பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியின் பத்தாவது வார்டு கச்சேரி வீதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல உரிய வாய்க்கால் அமைப்புகள் இருந்தும் அதனை பராமரிக்கத் தவறியதால், குளம் போல கழிவு நீர் குடியிருப்புகளை சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    தேங்கியிருக்கும் சாக்கடை நீர்


    கழிவு நீர் பல நாட்கள் ஒரே இடத்தில் தேங்கி சாக்கடையாக மாறி துர்நாற்றத்தை தருவதோடு சுற்றுச்சூழலை பாதித்து கொசுக்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த சாக்கடையில் இருந்து உருவாகும் கொசுக்கள் கச்சேரி வீதி பொதுமக்களை இரவு பகல் என பாராது தொந்தரவு செய்து வருகிறது.

    தேங்கியிருக்கும் சாக்கடை நீர்


    கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கச்சேரி தெருவைச் சேர்ந்த இரண்டு பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    அதன் பிறகும், பேரூராட்சி நிர்வாகமோ, சுகாதாரத்துறையினரோ கழிவு நீர் தேங்குவது குறித்து துளியும் கவலைப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

    மாவட்ட நிர்வாகமாவது உடனடியாக தலையிட்டு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இந்த கழிவு நேர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கச்சேரி வீதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி