Home /pudukkottai /

பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கந்தவர்க்கோட்டை புதிய பேருந்து நிலையம்- தீர்வு கிடைக்குமா?

பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் கந்தவர்க்கோட்டை புதிய பேருந்து நிலையம்- தீர்வு கிடைக்குமா?

பயன்பாடற்று கிடக்கும் பேருந்து நிலையம்

பயன்பாடற்று கிடக்கும் பேருந்து நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு பயன்பாடற்று கிடக்கிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு போக்குவரத்திற்கு நெரிசல் இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வந்தது. 2011-2016 ஆட்சிக் காலத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், அப்போதைய தமிழக அமைச்சராகவும் இருந்த என்.சுப்பிரமணியனின் முயற்சியில் கந்தர்வகோட்டை ஊரின் வடக்குப் பகுதியில் தஞ்சாவூர் சாலையில் புதிய பேருந்து நிலையம் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

    ஆனால், ஊரில் இருந்து மிகவும் ஒதுக்குப் புறமாக இருந்ததால் பொதுமக்களும், பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயன்படுத்த விரும்பாத சூழலில் பல ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் திறக்கப்படாமலே இருந்து சேதமடைந்து வருகிறது.

    பயன்பாடற்ற நிலையில் கந்தவர்க்கோட்டை புதிய பேருந்து நிலையம்


    மேலும், பொதுமக்கள் பயன்பாடு இல்லாத காரணத்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக கந்தர்வகோட்டை புதிய பேருந்து நிலையம் மாறி உள்ளது. மேலும் பல கோடி ரூபாய் நிதியிலிருந்து கட்டப்பட்ட இப்பேருந்து நிலையம் தற்போது சமூகவிரோதிகள் மது அருந்துவதற்காகவும், குப்பைகளை கொட்டுவதற்காகவும் பயன்பட்டு வருகிறது.

    பயன்பாடற்ற நிலையில் கந்தர்வக் கோட்டை புதிய பேருந்து நிலையம்


    அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கால்நடைகளை வளர்த்து வருவது மட்டுமே அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இப்பேருந்து நிலையம் தரும் பயன்பாடாகும். இப்படியாக பாழ்பட்டு இருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை வேறு ஏதேனும் அரசுத் துறையின் கட்டிடமாகவோ, கால்நடை மருத்துவமனையாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ மாற்றித் தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

    செய்தியாளர்: துர்கா மகேஸ்வரன், புதுக்கோட்டை
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Pudukkottai

    அடுத்த செய்தி